அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகத்திற்கு நிம்மதி! தேர்தல் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி.. சென்னை ஐகோர்ட்

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏவுமான சிவி சண்முகத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி வாக்காளர் கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கமலக்கண்னன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனக்கூறி சிவி சண்முகம் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

    Advertisement

    கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போட்டியிட்டார். இதில் 82,353 வாக்குகள் பெற்று சிவி சண்முகம் வெற்றி பெற்றார். மயிலம் தொகுதியில் 30,041 வாக்குகள் வித்தியாசத்தில் சிவி சண்முகம் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றியை எதிர்த்து கமலக்கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    Advertisement

    பல்வேறு முறைகேடுகள் செய்து சிவி சண்முகம் வெற்றி பெற்றதால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் வாக்காளர் இளந்திரையன் தெரிவித்து இருந்தார். தனது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சிவி சண்முகம் மனுதாக்கல் செய்தார்.

    விசாரணைக்கு தடை விதித்தால் பெரிய பாதிப்பு ஏற்படும் - அன்பில் மகேஷ் வழக்கில் போலீஸ் பதில் மனு தாக்கல்

    இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    இதில் சிவி சண்முகம் கோரிக்கையை ஏற்று, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் கமலக்கண்னன் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை எனக்கூறி அவரது வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது

    English Summary

    CV Shanmugam: A voter named Kamalakkannan had filed a petition in the Madras High Court seeking to declare the election of CV Shanmugam—a former AIADMK minister and the MLA for the Mailam constituency—as invalid. The Madras High Court has dismissed this petition. The court rejected the case challenging C.V. Shanmugam's victory, stating that there was no evidence to support the allegations raised by Kamalakkannan.