“இனி வெறும் இரண்டே நாட்களில் சாதி சான்றிதழ்”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு.. அசத்திய வன்னி அரசு!

  • சென்னை: "ஆதிதிராவிடர் இனத்தவருக்கு 2 நாட்களுக்குள்ளும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள்ளும் சாதி சான்றிதழ் வழங்கப்படும்" என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்களை பெற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஏற்படவும் கூடும். பள்ளி மற்றும் உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த கால இடைவெளியை வெறும் 2 நாட்களாக குறைக்க சமூக நீதித் துறை உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    அதன்படி ஆதிதிராவிடர்களுக்கு விண்ணப்பித்த 2 நாட்களிலும், பழங்குடியின மக்களுக்கு விண்ணப்பித்த 1 வாரத்திற்குள்ளும் சாதிச் சான்றிதழ் கிடைக்கும் வகையில், இதற்கான புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் சமூக நீதித் துறை.

    இது குறித்து சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, "தமிழ்நாடு முழுவதும் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைந்து, விரைந்து சாதி சான்றிதழ் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தல்படி, நமது சமூகநீதித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆதிதிராவிடர் இனத்தவருக்கு இரண்டு நாட்களுக்குள் வட்டாட்சியராலும், பழங்குடியினத்தவருக்கு ஒரு வார காலத்திற்குள் கோட்டாட்சியராலும் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

    தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரருக்கு விவரத்தினைத் தெரிவிக்க வேண்டும்.

    சான்றிதழ் கோரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் சான்றிதழ் வழங்கும் அலுவலர்களின் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கு நமது துறை சுட்டிக்காட்டியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister for Social Justice Vanni Arasu has stated that caste certificates will be issued to members of the Adi Dravidar community within two days and to members of the Scheduled Tribes within one week.