வாயில எதாவது வந்துரும்.. எதுக்கு கூட்டணி? காவிரி விவகாரம்.. கடும் கோபத்தில் பேசிய இயக்குனர் கவுதமன்

  • சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் கூறியும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் ஆண்ட கட்சிகளும், ஆள்கிற கட்சிகளும் உங்களுக்குள் காழ்ப்புணர்ச்சியுடன் சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு, கூத்து, கும்மாளம் கேலியை விட்டுட்டு ஆக்கப்பூர்வமான உரிமைகளை பெற்று கொடுங்கள். இல்லையென்றால் மெரினாவை திறந்து விடுங்க நாங்கள் பார்த்துக்கிறோம் என்று இயக்குனர் கவுதமன் காட்டமாக பேசினார்.

    Advertisement

    சேலத்தில் இயக்குனர் கவுதமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்தும் மத்திய அரசு மற்றும் தமிழகத்தில் ஆளும் தவெக உள்ளிட்ட கட்சிகளையும் விமர்சித்து மிகவும் காட்டமாக பேசினார். ஆளும் அரசும், ஆண்ட கட்சிகளும் வேடிக்கை பார்த்தால் இதே நிலை தொடராது.. கூட்டணியை முதலில் முறிங்க? இல்லாட்டி மெரினாவை திறங்க.. அப்புறம் நாங்க பாத்துக்குறோம். என்று ஆவேசமாக பேசினார். இயக்குநர் கவுதமன் கூறியதாவது:-

    Advertisement

    கன்னடர்களை பாதுகாத்தோம்

    காலம் காலமாக ஒரு மோசமான சொற்றொடரை ஒரு நிலைப்பாட்டை பேசுவது அயோக்கியத்தனம். காவிரி பிரச்சினைக்காக இங்கே போராடினால் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால், தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடர்களை நாங்கள் பூ கொடுத்து வரவேற்போமா..

    எத்தனையோ முறை பல்லாயிரக்கணக்கான எங்கள் தமிழர்களை, கர்நாடக வெறியர்கள் வாட்டாள் நாகராஜ் போன்ற மிருகங்கள் அடித்து கொன்ற போது கூட நாங்கள் இங்கே இருக்கும் கன்னடர்களை பாதுகாத்தோம். அவர்கள் மீது நாங்கள் வன்முறையை ஏவவில்லை. ஆனால் இதே நிலை தொடரும் என்று அங்கே இருப்பவர்கள் நினைப்பதும் இங்கே இருப்பவர்கள் வேடிக்கை பார்ப்பதும்.. ஆள்கிற அரசு, அல்லது ஆண்ட கட்சிகளும் வேடிக்கை பார்த்தது என்றால் இதே நிலை தொடராது.

    Advertisement

    தமிழர்கள் மீது கை வைத்தால்

    ஜல்லிக்கட்டுக்கு எரிமலையாக எழுந்த கூட்டம் மறுபடியும் கர்நாடகாவில் ஒரு தமிழர் மீது கை வைத்தாலும் இங்கே 10 பேரை நாங்கள் பார்க்க வேண்டியிருக்கும். இங்கே வசிக்கும் கன்னடர்கள் மீது அன்பு, பாசம் காட்ட தயாராக இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து இந்த சமூகம் வேடிக்கை பார்க்கும் என்று.. நினைத்துக்கொண்டு அங்கே இருக்கும் தமிழர்கள் மீது நீங்கள் கை வைத்தால் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத கொந்தளிப்பை தமிழ்நாட்டில் நீங்கள் பார்ப்பீர்கள்.

    எல்லோரையும் உடன் பிறந்தவர்களாக நாங்கள் பார்ப்போம். எங்களை மட்டும் எதிரியாக பார்ப்பாகள்.. அடிப்பார்கள் என்றால்.. இங்க இருக்கிற அரசியல்வாதி யாராவாது பேசினால், இங்க இருக்கிற நடிகர் யாராவது பேசினால்.. அங்க இருக்கிற தமிழர்களுக்கு பாதிப்பு என்று யாராவது பேசினால், பேசியவர்கள் வாயை முதலில் உடைப்போம். அதனால், இந்த பூச்சாண்டி எல்லாம் வைத்துக்கொள்ளக்கூடாது.

    Advertisement

    கூட்டணியை முறிங்க

    தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது நடுவர் மன்றம் சொல்கிறது. சட்டம் சொல்லுது. இந்திய ஒன்றிய அரசை ஆளும் கட்சி, மத்தியிலே இருக்கிற கட்சி, அவர்களோடு கூட்டணியில் இருக்கும் கட்சி, இங்க இருக்கிற கட்சிகள்.. இவுங்க எல்லாம் எந்த காலத்திலும் தமிழனுக்கு தீர்வு கொடுக்க மாட்டார்கள் என்றால்.. எதாவது வாயில வந்துரும்.. எல்லாரும் சொல்ற மாதிரி..

    அப்புறம் எதுக்கு கூட்டணி.. கூட்டணியை முறிங்க. எங்களுக்கு உண்டான தண்ணீரை தரவேண்டும்.. ஆண்ட கட்சிகளும், ஆள்கிற கட்சிகளும் உங்களுக்குள் காழ்ப்புணர்ச்சியுடன் சட்டமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு, கூத்து, கும்மாளம் கேலியை விட்டுட்டு எங்களுக்கு ஆக்கப்பூர்வமான உரிமைகளை பெற்று தாருங்க.. இல்லையென்றால் மெரினாவை திறந்து விடுங்க நாங்கள் பார்த்துக்கிறோம்" என்றார்.

    English Summary

    Director Gowthaman spoke sharply regarding the Cauvery dispute, stating that despite rulings from the Supreme Court and the Cauvery Water Disputes Tribunal, no solution has been found. He urged both past and present ruling parties to stop the petty bickering, mockery, and theatrics in the Legislative Assembly, and instead focus on securing their rightful entitlements. He declared, "If you cannot do that, open up the Marina—we will handle it ourselves."