தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் கிடைத்த மாதிரிதான் போங்க! G.O போட்டும் முக்கிய பொறுப்புக்கு ஆள் போடல!

  • சென்னை: காவிரி தொழில்நுட்ப குழும துணைத் தலைவராக நியமனம் செய்ய கடந்த அக்.9ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 17 நாட்கள் ஆகியும், இன்னும் துணைத்தலைவர் நியமிக்கப்படாமல் இருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

    Advertisement

    கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி முதல், 2026 ஜூன் மாதம் 28ம் தேதி வரை, இந்த பொறுப்பில் செல்வராஜ் என்பவர் இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும், இன்னும் அந்த பொறுப்புக்கு ஆள் நியமிக்கப்படாமல் இருப்பது காவிரி நீரை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    ரொம்ப முக்கியமான அமைப்பு

    இந்த அமைப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கான உதாரணத்தை பார்ப்போம். காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் நடைபெறும் சட்டப் போராட்டங்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப தரவுகளை திரட்டுவது இந்த குழுமம் தான்.

    கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு எவ்வளவு இருக்கிறது? தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீரின் அளவு என்ன? மேகதாது அணைக்கட்டுவதால்.. தமிழகத்தை ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? போன்ற புள்ளி விவரங்களை ஆதாரங்களுடன் தயார் செய்வது, தமிழக அரசு வக்கீல்களுக்கு வழங்கி.. வழக்குகளை வலுப்படுத்துவது இவர்களின் முக்கிய வேலையாகும்.

    Advertisement

    பெரிய சிக்கல்

    இப்பிரிவில் நீர்வளத்துறை பொறியாளர்கள் மட்டுமின்றி, நிலத்தடி நீர் நிபுணர்கள், வேளாண்மை வல்லுநர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் என பல்துறை நிபுணர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களின், விவசாய தேவைகள் மற்றும் பருவ மழை பொழிவின் புவியியல் மாற்றங்களை அறிவியல் பூர்வமாக மதிப்பிட, இவர்கள் கூட்டணி மிகவும் அவசியமானது.

    இவர்கள் வெறுமனே காவிரி நதிநீர் பிரச்சினை மட்டுமல்லாது, முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பாலாறு மற்றும் பரம்பிக்குளம்-ஆழியாறு போன்ற இதர அண்டை மாநில நதிநீர் சிக்கல்களிலும்.. தமிழக அரசின் தொழில்நுட்ப கவசமாக செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக குழுமததின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பு மிக முக்கியமானது. இப்பேற்பட்ட குழுவில் துணைத் தலைவர் பதவி இன்னும் காலியாக இருப்பது? பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    17 ஆகியும் நியமனம் இல்லை

    பதவி காலியான பின்னர், முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இப்படியே பதவி காலியாக இருந்தால்.. தொடர்ச்சியாக முடிவெடுப்பது சிக்கல் வரும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து அக்டோபர் 9ஆம் தேதி, நிதித் துறையின் ஒப்புதலோடு.. ஏற்கனவே இருக்கிற தலைமை பொறியாளர்களில் இருந்து? சீனியாரிட்டி தகுதி பார்த்து நியமிக்கலாம் என்று அனுமதி கொடுக்கப்பட்டது. இதற்காக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அரசாணை பிறப்பிக்கப்பட்டு 17 நாட்கள் ஆகியும் இப்பொழுது வரை துணைத்தலைவர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை என்பதுதான் சிக்கல்.

    Advertisement

    அரசின் கவனக்குறைவு

    காவிரி தொழில்நுட்பக் குழுமத்தின் தலைவராக சுப்ரமணியன் இருக்கிறார். அவர் இருந்தாலும், துணைத் தலைவர் இல்லாமல்.. முழு வேலையும் அவர் ஒருவரால் மட்டும் பார்க்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அமைச்சர் ஆனந்த், நீர்வளத் துறை செயலாளர் ஆகியோர் உடனடியாக முடிவெடுத்து இருக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தவெக அரசு இதில் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஒருவேளை அரசு கவன குறைவாக இருக்கிறது என்றாலும்.. நீர்வளத்துறை செயலாளருக்கு இதன் முக்கியத்துவம் தெரிந்து இருக்கும்.

    ஆனால், அவர் தனது தரப்பிலிருந்து வலியுறுத்தினாரா? அல்லது அந்த வலியுறுத்தலை அரசு ஏற்கவில்லையா? என்பது தெரியவில்லை. அதேபோல முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், இது தொடர்பாக அரசுக்கு வலியுறுத்தி இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    விஜய் உடனடியாக இதை செய்யனும்

    எது எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைந்து இருக்கிறது. வெறும் 1,000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த தண்ணீரை வைத்து டெல்டாவில் சம்பா-தாளடி சாகுபடி நடக்காது. கர்நாடகாவில் இருந்து கூடுதல் நீரை வாங்கினால் மட்டும்தான் சாகுபடி நடக்கும். இதை செய்ய, இந்த குழுவில் முழு பலம் வேண்டும். எனவே இதையெல்லாம் கருத்தில்கொண்டு முதலமைச்சர் விஜய், உடனடியாக துணைத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.

    English Summary

    Cauvery Technical Group: A government order was issued on October 9th regarding the appointment of a Vice-Chairman for the Cauvery Technical Group. However, the fact that no Vice-Chairman has been appointed even 17 days later has sparked discussion.