கர்நாடகாவுக்கு மீண்டும் அடி.. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 6000 கன அடி நீரை திறக்க அதிரடி உத்தரவு!

  • சென்னை: இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டமும் நடைபெற்ற நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு 6000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என உத்தரப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 100 அடிக்கு மேல் இருக்கும்போது, காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். வழக்கமாக சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படும்.

    Advertisement

    இந்த நிலையில், நடப்பாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கான காவிரி நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

    குறுவை சாகுபடி

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணை

    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 45 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. muthalil குறைந்த அளவிலான நீர் திறக்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் வரும் நிலையில் பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 7000 கன அடியில் இருந்து 10000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், காவிரி காவிரி ஆறு, கிளை ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் பல இடங்களில் வறண்டு காணப்படுகிறது.

    Advertisement

    டெல்டா விவசாயிகள்

    இதனால், இந்த தண்ணீர் நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேருமா என்ற கவலை டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டபோது, மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடைப் பகுதியான பூம்புகார் மேலையூர் கதவணைக்கு சுமார் 10 நாட்களுக்குள் தண்ணீர் வந்து சேரும். ஆனால், தற்போது வறண்டு கிடக்கும் காவிரி ஆறு மற்றும் கிளை ஆறுகள், வாய்க்கால்களை நிரப்புவதற்கே அதிக நாட்கள் ஆகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    காவிரி நீர் பங்கீடு

    தற்போதைய நீர்திறப்பு குடிநீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய உதவுமே தவிர, விவசாயத்திற்குத் தேவையான அளவு தண்ணீரை வழங்க போதுமானதாக இருக்காது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, காவிரி நீர் பங்கீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை முழுமையாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவிரியில் முறை வைத்து தண்ணீர் திறக்காமல், தமிழகத்தின் பாசனத் தேவையை கருத்தில் கொண்டு உரிய அளவு தண்ணீரை தொடர்ந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    Advertisement

    காவிரி மேலாண்மை ஆணையம்

    இந்த நிலையில் விவசாயிகளுக்கு சற்றே ஆறுதல் தரும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56 வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக்கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி உத்திரவிடப்பட்டது. தமிழ்நாடு 12,000 கன அடி தண்ணீர் கேட்டபோது வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா தண்ணீர் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டது. ஆனால் தங்களிடம் குறைந்த அளவே நீர் இருப்பதாக கூறிய கர்நாடகா 2000 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் எனக் கூறியது.

    Advertisement

    காவிரி நீர் ஒழுங்காற்று குழு

    கர்நாடகாவின் கோரிக்கையை இன்று காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டம் கூடி ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டமும் நடைபெற்ற நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டுக்கு 6000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என உத்தரப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் மழை பெய்து ஒரு நிலையில் காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English Summary

    Cauvery Management Authority orders Karnataka to release 6000 cusecs to Tamil Nadu for 15 days, offering relief to delta farmers.