கர்நாடகாவிடம் தமிழக முதல்வர் மண்டியிட தேவையில்லை! மேகதாது விவகாரத்தில் சிபிஎம் எம்எல்ஏ திட்டவட்டம்

  • சென்னை: தமிழ்நாடு முதல்வர் எந்தவொரு காரணத்திற்காகவும் கர்நாடகாவிடம் மண்டியிட தேவையில்லை என்று கூறிய சிபிஎம் எம்எல்ஏ செல்லசாமி, தமிழக முதல்வருக்கு ஏற்படும் அவமானம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்படும் அவமானம் என குறிப்பிட்டார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த இரு நாட்கள் முறையே பொது பட்ஜெட் மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று விவாதம் தொடங்கியது. இன்று அவையில் மேகதாது அணை கட்டும் விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக விவாதம் நடந்தது.

    Advertisement

    அதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பேசினர். அப்போது சிபிஎம் சார்பில் பேசிய செல்லசாமி எம்எல்ஏ, தமிழ்நாடு முதல்வர் எந்தவொரு காரணத்திற்காகவும் கர்நாடகாவிடம் மண்டியிட தேவையில்லை என்றும் தமிழக முதல்வருக்கு ஏற்படும் அவமானம் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்படும் அவமானம் என குறிப்பிட்டார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "மேகதாது அணையை கட்டக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமும், நடுவர் மன்றமும் ஏற்கனவே முடிவு செய்த பிறகும், அந்த அணையை கட்டியே தீருவேன் என கர்நாடகா சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. அதேநேரம் இதை நாம் சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர. அவர்களிடம் போய் மண்டியிட தேவையில்லை. காவிரி என்பது கர்நாடகாவுக்கு மட்டுமானது இல்லை. அதில் பல்வேறு மாநிலங்களும் உரிமை இருக்கிறது.

    Advertisement

    எனவே, தமிழக முதல்வர் அங்கே சென்று அவர்களிடம் மண்டியிட தேவையில்லை. அப்படியொரு அவமானம் ஏற்பட்டால் அந்த அவமானத்தை தாங்க தயார் என்று முதல்வர் குறிப்பிட்டார். ஆனால், அது சரி இல்லை. முதல்வர் பதவியில் இருக்கும் அவருக்கு ஒரு அவமானம் ஏற்பட்டால்.. அது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானமாகவே கருதப்படும். எனவே, இதுபோல கர்நாடகாவிடம் சென்று மண்டியிட தேவையில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்தையும் நாம் அறிய வேண்டும். அனைத்து மக்களையும் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து, நாம் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்.

    Advertisement

    காவிரி சார்ந்து இருக்கும் மக்களால் குருவை சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை தர வேண்டும். மொத்தத்தில் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்றார்.

    English Summary

    During the Tamil Nadu Assembly debate on the Mekedatu dam and Cauvery water dispute(காவிரி விவகாரம் தொடர்பாக சிபிஎம் கருத்து): CPM MLA Chellasamy said the Tamil Nadu Chief Minister need not compromise before Karnataka and called for an all-party meeting.