விஜய்க்கு வேற லெவல் யோகம்! திமுக டெல்லி போன நேரத்துல.. பொங்கிப் பெருகுது காவிரி! பஞ்சாயத்து ஓவர்!

  • பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து வேகமாக அதிகரித்துள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு விநாடிக்கு 15,000 கனஅடி காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். காவிரி நீர் விவகாரத்தில் விஜய் வாய் திறக்க வேண்டுமென தமிழக எதிர்க் கட்சிகள் குரல் கொடுத்த நிலையில், திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு மழையும், காலமும் கை கொடுத்துள்ளதாகச் சொல்கின்றனர் தவெகவினர்.

    Advertisement

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகும், மே மாத இறுதியிலும் ஜூன், ஜூலை மாதங்களிலும் கர்நாடகாவின் தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை.

    Advertisement

    இதன் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை.

    காவிரி

    இதையடுத்து தமிழக அரசு காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் முறையிட்டது. அந்த மனுவை பரிசீலித்த ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. இருப்பினும் மேலாண்மை ஆணையமும் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உறுதி செய்ததால், கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    முதல்வர் விஜய்

    தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் முற்றுகையிடப்பட்டதோடு, படத்தின் பேனர்களும் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், கடந்த ஜூலை 31-ம் தேதி மாலை முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக தலைக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, சோமவார்பேட்டை, வீராஜ்பேட்டை உள்ளிட்ட குடகு மாவட்ட பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கபினி அணை

    அதேபோல், காவிரியின் முக்கிய துணைநதியான கபினி உருவாகும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு வரும் நீர்வரத்து திடீரென பல மடங்கு அதிகரித்துள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் உள்ள கபினி அணைக்கு நேற்று முன்தினம் வரை சுமார் 6,000 கனஅடி மட்டுமே நீர் வந்த நிலையில், நேற்று பிற்பகலில் அது 16,000 கனஅடியாக உயர்ந்தது. இதேபோல் ஹாரங்கி மற்றும் ஹேமாவதி அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்ததால் அவற்றின் நீர்மட்டமும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    15,000 கனஅடி

    கடல் மட்டத்திலிருந்து 2,284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,280 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி முதலில் தமிழகத்துக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மாலை 5 மணிக்கு 10,000 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 15,000 கனஅடியாகவும் நீர் திறப்பு உயர்த்தப்பட்டது. கபினி அணையில் இருந்து திடீரென அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    டெல்டா விவசாயிகள்

    இதையடுத்து கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் கபினி மற்றும் ஹாரங்கி அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.

    Advertisement

    முழு கொள்ளளவு

    இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அணைகள் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு இருப்பதாக கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை தொடர்ந்தால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    English Summary

    Karnataka releases 15,000 cusecs to Tamil Nadu as heavy rains boost Cauvery inflow amid Mekedatu dispute.