ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்று வழங்கிய சென்சார்! விஜய் மாமா படத்தை குட்டீஸ் பார்க்க முடியாதே!

  • சென்னை: விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம். ஏ சான்றிதழ் படத்திற்கு 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்தின் பஞ்சாயத்துகள் ஓய்ந்து சென்சார் சான்றிதழும் கிடைத்துள்ளது.

    Advertisement

    இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொங்கலையொட்டி 9ஆம் தேதி ஜனநாயகன் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சென்சார் பிரச்சினையில் சிக்கியது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் தணிக்கை குழுவுக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

    இதை எதிர்த்து படக்குழு மேல்முறையீட்டிற்கு செல்லாத நிலையில், மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு கொண்டு சென்றது. கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் மறு தணிக்கையும் செய்யப்பட்ட நேரத்தில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதனால் தேர்தலின் போது ஒரு அரசியல் கட்சித் தலைவர் நடித்த படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது. இதனிடையே ஏப்ரல் 10 ஆம் தேதி இணையத்தில் கசிந்தது. இது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கசிவிற்கு ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் எதிர்த்து குரல் கொடுத்தனர். இதையடுத்து இந்த படம் இணையதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட்டு படத்தின் எடிட்டர்தான் இந்த கசிவுக்கு காரணம் என சொல்லப்பட்டு அவரை தென்னிந்திய எடிட்டர் அசோசியேஷன் இடைநீக்கம் செய்திருந்தது.

    Advertisement

    கிட்டதட்ட 5 மாதங்களுக்கு பிறகு, தற்போது ஜனநாயகன் படத்திற்கு ஏ சான்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பல இடங்களில் சில காட்சிகளை நீக்கவும், குறிப்பிட்ட வசனங்களை மியூட் செய்யவும் தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின.

    இந்த மாற்றங்கள் படத்தில் செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்சார் சான்றிகழ் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் விரைவில் ஜனநாயகன் தியேட்டர்களில் ரிலீஸாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

    ஜூலை 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. எச் வினோத் இயக்கத்தில் உருவான படம்தான் ஜனநாயகன். இந்த படம் தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்த படத்தில் விஜய் அரசியல் வருகையையொட்டி சில காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் தளபதி கச்சேரி பாடல் வெளியாக செம ஹிட்டடித்தது. முதலில் ஜூலை 16 அல்லது 23 தேதிகளில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஜூலை 24 ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிகிறது. எனினும் படத்தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    மேலும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் 18 வயதுக்குள்பட்டோர் படம் பார்க்க அனுமதி இல்லை. விஜய்க்கு ஏராளமான குட்டீஸ்கள் ரசிகர்களாக இருந்து வரும் நிலையில் ஜனநாயகன் தந்த ஏமாற்றத்தை எப்படி தாங்க போகிறார்களோ? ஏற்கெனவே இதுதான் விஜய்யின் கடைசி படம் என்ற அறிவிப்பிற்கே பல குழந்தைகள் அழுதனர்.

    Advertisement

    தற்போது அந்த கடைசி படத்தை கூட தங்களால் பார்க்க முடியவில்லை என்பதை அறிந்தால் என்ன சொல்வார்களோ? அதிக வன்முறை காட்சிகள் இருந்தால் ஏ சான்றிதழ் வழங்கப்படும். இதே போல் கூலி படத்திற்கும் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.