CBSE Board Exam Dates: சிபிஎஸ்இ 10 – பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

  • சென்னை: சிபிஎஸ்இ 10, மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 பிப்ரவரி 16ல் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிவடைகிறது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2027 பிப்ரவரி 17 ல் தொடங்கி மார்ச் 9ல் முடிவடைகிறது.

    Advertisement

    ஒவ்வொரு ஆண்டும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அக்டோபர் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த முறை அப்படி நடக்கவில்லை. காலதாமதம் ஆனது.

    Advertisement

    இந்நிலையில் தான் இன்று சிபிஎஸ்இ சார்பில் 2027 ம் ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், ''சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு எழுத 26.5 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 83 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத 19.8 லட்சம் மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். பிளஸ் 2வை எடுத்து கொண்டால் 121 பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது.

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2027 பிப்ரவரி மாதம் 17 ம் தேதி தேர்வுகள் தொடங்கி மார்ச் 9 ல் முடிவடைய உள்ளது. முன்னதாக பிப்ரவரி 16ல் பெயிண்ட்டிங் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 16ல் தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த தேர்வுகள் தேர்வு நாளில் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மற்றும் 1.30 மணி வரை நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தேர்வு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணையை பார்க்க Click Here

    English Summary

    CBSE Board Exam Dates: The dates for the CBSE Class 10 and Class 12 board examinations have been announced today. Accordingly, the CBSE Class 12 board examinations will begin on February 16, 2027, and conclude on April 1, 2027. The CBSE Class 10 board examinations will commence on February 17, 2027, and end on March 9, 2027.