CBSE: சிபிஎஸ்இ விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு.. மாணவர்கள் குஷி!

  • சென்னை: சிபிஎஸ்இ (CBSE) பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு & விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. முன்பு விடைத்தாளின் நகலை பெறுவதற்கு மாணவர்கள் ரூ.700 செலுத்த வேண்டியிருந்தது. தற்போது, ரூபாய் 100 செலுத்தினாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல, சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம் ரூபாய் 500-ல் இருந்து ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

    Advertisement

    டிஜிட்டல் முறையில் மதிப்பீடு

    மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய 'ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியது. ஆனால், இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், விடைத்தாள்களை ஸ்கேன் செய்ததில் குறைபாடுகள் மற்றும் மதிப்பெண் வழங்குவதில் குளறுபடிகள் இருப்பதாகவும் மாணவர்கள் மத்தியில் பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

    இதனை சிபிஎஸ்இ கவனத்தில் எடுத்துக்கொண்டது. பிளஸ்-2 தேர்வு எழு​திய மாணவர்​கள் பலர் தங்கள் மதிப்​பெண்​கள் குறித்து மிகுந்த வருத்​தத்​துடன் இருப்​ப​தாக​வும், அதற்கு புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்ட டிஜிட்​டல் விடைத்​தாள் மதிப்​பீட்டு முறையே காரணம் என்று கருது​வ​தாக​வும் சமூக வலை​தளங்​கள் வழி​யாக தகவல்​கள் வரு​கின்​றன என தெரிவித்தது.

    Advertisement

    முக்கிய அறிவிப்பு

    புதி​தாக அறி​முகம் செய்​யப்​பட்ட டிஜிட்​டல் விடைத்​தாள் திருத்​தம் நடை​முறை​யானது, அனுபவ​மிக்க ஆசிரியர்​கள் தயாரித்த மதிப்​பீட்டு திட்​டத்​தின் அடிப்​படை​யில், ஒரே மாதிரி​யான மற்​றும் சீரான மதிப்பீட்டை உறு​தி​செய்​யும். மேலும் அந்த மதிப்​பீட்​டில் மாற்று முறை​களில் எழுதப்​பட்ட பதில்​களுக்​கும், மதிப்​பெண் பெறும் வகை​யில் வழி​காட்​டு​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. எனினும் மாணவர்​களுக்கு தங்​கள் தேர்வு முடி​வில், திருப்தி இல்​லை​யெனில், மறுகூட்​டல், திருத்​தப்​பட்ட விடைத்​தாள்​களைப் பார்​வை​யிடு​தல் மற்​றும் மறும​திப்​பீடு கோரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதோடு, விடைத்தாள்களை மறுசரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணங்கள் பெருமளவில் குறைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் சஞ்சய் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

    Advertisement

    கட்டணம் குறைப்பு

    புதிய கட்டண அமைப்பின்படி, மாணவர்கள் தங்களது விடைத்தாளின் ஸ்கேன் நகலைப் பெற இனி வெறும் 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதேபோல், மதிப்பெண்களை சரிபார்ப்பதற்கும் தனியாக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் உள்ள ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான மதிப்பெண்ணை மறுமதிப்பீடு செய்யக் கோரி சவால் செய்ய விரும்பினால், ஒவ்வொரு கேள்விக்கும் தலா 25 ரூபாய் செலுத்த வேண்டும்.

    இனி 700 இல்லை.. 100 மட்டுமே

    இதற்கு முன்னதாக, விடைத்தாளின் நகலைப் பெற 700 ரூபாயும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு 500 ரூபாயும், ஒவ்வொரு கேள்வியையும் மறுமதிப்பீடு செய்ய 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கட்டணம் ரூபாய் 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது மாணவர்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

    Advertisement

    அத்துடன் மாணவர்களுக்கு சாதகமான மற்றொரு முக்கிய அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் மறுசரிபார்ப்பு அல்லது மறுமதிப்பீட்டு செயல்முறையின் போது ஒரு மாணவரின் மதிப்பெண்கள் அதிகரித்தால், அவர்கள் இந்த மறுமதிப்பீட்டிற்காக செலுத்திய ஒட்டுமொத்த தொகையும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் (Refund) என்று சஞ்சய் குமார் உறுதி அளித்துள்ளார்.

    English Summary

    The fees for the re-evaluation of answer sheets and for obtaining copies of answer sheets for the CBSE Plus 2 examinations have been reduced. Previously, students were required to pay ₹700 to obtain a copy of their answer sheet; it has now been announced that paying just ₹100 is sufficient.