தமிழகத்தில் நாளை முதல் 52 கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை? எந்தெந்த கோயில்கள்?

  • சென்னை: தமிழகத்தில் உள்ள 52 கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. மீறினால் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து கோயில்களிலும் பொதுமக்களுக்கு பேனர் வைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    தமிழகத்தில் கோயில்களின் புனிதத்தன்மை, ஆன்மீக சூழலை பாதுகாக்கும் வகையில் கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல கோயில்களில் பக்தர்கள் செல்போன்கள் மூலம் புகைப்படம், வீடியோ, செல்பி எடுக்கிறார்கள்.

    மேலும் ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து சமூகவலைதள பதிவு செய்வதாகவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு புகார்கள் வந்தன. இதனால் கோயிலுக்கு வழிபாடு செய்ய வரும் பிற பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்படுவதுடன் கோயில்களின் புனிதத்தன்மையும் பாதிக்கப்படுவதாக இந்து அறநிலையத் துறை தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கோயில் நிர்வாகங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் "செப்டம்பர் 1-ந்தேதி முதல், முதுநிலை திருக்கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வது முழுமையாக தடை செய்யப்படும்.

    Advertisement

    முக்கிய பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கோவிலுக்குள் சென்று வீடியோ அல்லது புகைப்படம் எடுக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் நாளை (1-ந்தேதி) முதல் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கோயிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கல் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள வசதிக்கேற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    பக்தர்களிடம் இருந்து செல்போன்களை பெற்று ஒரு செல்போனுக்கு ரூ 5 கட்டணம் வசூலிக்கப்பட்டு அதற்கான ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. அது போல் சினிமா பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வருகை தெரியவந்தால் ஒரு நாளுக்கு முன்பாகவே அல்லது தகவல் கிடைத்த உடனேயோ அவர்கள் வரவிருக்கும் கோயில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்களை ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயில், திருத்தணி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அது போல் திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் உள்ளிட்ட கோயில்களில் நாளை முதல் செல்போன்கள் கொண்டு செய்ய தடை விதிக்கப்படுகிறது.

    English Summary

    Cellphones are banned from tomorrow at 52 temples in Tamil nadu. What are the temples?