வீடு தேடி வந்து கேள்விகளை கேட்டு துளைக்க போகும் அதிகாரிகள்! கேள்வி நம்பர் 10ல் வெடித்த சர்ச்சை!

  • டெல்லி: 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்வித்தாளில் இடம்பெற்றுள்ள 10-வது கேள்வி தற்போது அரசியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சாதி விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு தேர்வு செய்துள்ள முறை மீது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    Advertisement

    மத்திய அரசு இப்போது 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு சர்வையே நடத்துகிறது. அதில் விரைவில் தொடங்கும் 2ஆம் கட்ட படிவத்தில் 40 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், அதில் உள்ள கேள்வி எண் 10 (சாதி பற்றிய விவரம்) தான் தற்போதைய சர்ச்சைக்கு முதன்மை காரணமாகும்.

    Advertisement

    கேள்வி நம்பர் 10

    1931-க்குப் பிறகு முதல்முறையாக இந்த கணக்கெடுப்பில் சாதி விவரங்களும் சேகரிக்கப்படவுள்ள நிலையில், கேள்வி எண் 10-ல் "சாதி" என்ற இடத்தில் Drop-down menuக்கு பதிலாக, ஓபன் எண்ட் கேள்வியாக இது வழங்கப்பட்டுள்ளது. அதாவது கேள்விக்கு பதிலளிப்போர் தங்கள் சாதியை டைப் செய்ய வேண்டும். இதுதான் முக்கிய சர்ச்சையாக மாறியுள்ளது.

    சாதியை கேட்கிறார்கள்.. அதற்கான பதிலை இவர்கள் சொல்கிறார்கள். இதில் என்ன சர்ச்சை என்று உங்களுக்கு கேள்வி வரும். இதுபோல ஓபன் எண்ட் கேள்வியாக இருக்கும்போது, சாதி பெயர்கள் உள்ளூர் மொழி மற்றும் வட்டார வழக்கு, உட்சாதி உள்ளிட்ட காரணங்களால் பல விதமாக பதிவாகலாம் என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

    Advertisement

    சிக்கல் என்ன

    இதற்கு உதாரணமாக 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அப்போதும் இதுபோல ஓபன் எண்ட் கேள்வியாகவே விடப்பட்டு இருந்தது. இதனால் 46 லட்சத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு சாதி பெயர்கள் பதிவானது. இவ்வளவு சாதிகள் பதிவான நிலையில், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் 2027 கணக்கெடுப்பிலும் இதேபோன்ற குழப்பம் ஏற்பட்டால், ஒவ்வொரு சாதியையும் துல்லியமாக கணக்கிடுவது கடினமாகிவிடும் என்பது எதிர்க்கட்சிகளின் வாதம். இதற்கு பதிலாக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்ற வகையில் சாதிய பட்டியலை முறையை தயார் செய்ய வேண்டும் என்றும் அதை சர்வேக்களில் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோருகின்றனர். பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்புகளில் இதுபோன்ற அணுகுமுறை பயன்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

    Advertisement

    மத்திய அரசு விளக்கம்

    மாநிலங்களின் ஓபிசி பட்டியலும், மத்திய அரசின் ஓபிசி பட்டியலும் முழுமையாக பொருந்துவதில்லை. அதாவது மாநில அளவில் ஓபிசியாக இருப்போர் சில நேரம் மத்திய அரசு பட்டியலில் ஓசி பிரிவில் வருவார்கள். இதன் காரணமாகவே முன்கூட்டியே சாதிய லிஸ்ட்டை தயார் செய்வதை மத்திய அரசு தவிர்க்கிறது.

    மேலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகளின் பெயர்கள், உட்சாதிகள் மாறுபடுவதால், நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய ஒரே பட்டியலை தயாரிப்பது சிக்கலானது என கூறப்படுகிறது. இதனால் மக்கள் கூறும் சாதி பெயரை நேரடியாக பதிவு செய்து, பின்னர் தொழில்நுட்பம் மற்றும் ஏஐ கருவிகள் மூலம் அதை ஒருங்கிணைக்கலாம் என மத்திய அரசு கருதுகிறது.

    Advertisement

    ஏன் முக்கியம்?

    சாதிவாரி கணக்கெடுப்பு வெறும் நம்பரை தெரிந்து கொள்ளும் நடவடிக்கை மட்டுமில்லை.. ஓபிசி உள்ளிட்ட சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு, நலத்திட்டங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பான அரசியல் மற்றும் நிர்வாக முடிவுகளுக்கு இவை முக்கியமாக இருக்கும். ஆனால், டேட்டா முறையாக பிரிக்கப்படாமல் பல ஆயிரக்கணக்கான சாதிய பெயர்களால் சிதறினால், கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகும். அதாவது ஒட்டுமொத்த சர்வேயும் பயன்படுத்த முடியாமல் போகும்.

    2011ல் 29 கேள்விகள் இடம்பெற்ற நிலையில், 2027 கணக்கெடுப்பில் கேள்விகளின் எண்ணிக்கை 40ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சில விவரங்களும் கேட்கப்பட உள்ளன. மேலும், டிஜிட்டல் கல்வியறிவு, கொரோனா தடுப்பூசி நிலை, பெற்றோரின் விவரங்கள், பார்ட்னர் பெயர் மற்றும் குடியுரிமை உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

    English Summary

    Census 2027 will collect caste details for the first time since 1931(மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து வெளியான தகவல்): Census explained in tamil.