ராயப்பேட்டை வீடு.. முட்டுக்காடு பங்களா.. வீரமணி இடங்களை சுத்து போட்ட போலீஸ்.. 10 இடங்களில் ரெய்டு

  • சென்னை: சிறுமிகளுக்கு பாலியல் கொடுத்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் நண்பர், உதவியாளர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் இந்த வழக்கை மூடி மறைக்க பெரிய தொகை கை மாறியதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக தினசரி பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் வீரமணி தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தியளவில் கிரானைட் தொழிலில் கோலோச்சியவர் வீரமணி. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவருக்கு வயது 84. ஜெம் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார். கிரானைட் தொழில் சார்ந்த சங்கங்களின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். இவர் பல சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். இதற்கு அவர் நண்பர்களும் துணையாக இருந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் திமுக ஆட்சியில் கடந்த 2025 ஆம் ஆண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வீரமணி இடங்களில் ரெய்டு

    வழக்குப்பதிவு செய்தாலும் உரிய விசாரணை நடத்தப்படவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததும் வழக்கு விசாரணை தொடங்கி சூடுபிடித்தது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து ரசிப்பதை வீரமணி வாடிக்கையாக வைத்துள்ளார். வீரமணியின் அதிர்ச்சி பின்னணி, பாதிக்கப்பட்ட பெண்களின் வலி ஒரு பக்கம் என்றால், இவ்வளவு பெரிய வழக்கை திமுக ஆட்சியில் மூடி மறைத்ததாக சர்ச்சை எழுந்தது. வீரமணிக்கும், திமுக தலைமைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. இதற்கு பெரிய தொகை கை மாறியது தவெக அமைச்சர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

    இதை திமுக முன்னாள் அமைச்சர்கள் மறுக்கிறார்கள். வழக்கு விசாரணையை மட்டுமே தள்ளிவைக்கப்பட்டது என்று திமுகவினர் கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெம் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். ராயப்பேட்டையில் உள்ள அவரின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள சாந்தியின் வீட்டிலும் சோதனை நடக்கிறது. சாந்தியின் வீட்டில் வைத்து தான் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர்.

    கைமாறிய ரூ.70 கோடி

    இதேபோல முட்டுக்காடு பகுதியில் உள்ள பங்களா, ஜெம் அலுவலகம் ரெய்டு நடக்கிறது. அவர்களின் சொத்து விபரம், யாருக்கெல்லாம் பணம் பரிமாறப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ரெய்டு நடத்தப்படுகிறது. 7 முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை குறி வைத்து தான் வீரமணி செயல்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து விசாரணை நடத்தப்படுகிறது.

    இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக வீரமணி நிலத்தை விற்று ரூ.70 கோடி செட்டில் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை சேகரிக்கவே ரெய்டு நடக்கிறது. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், விபச்சார பிரிவு தடுப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மேலும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Gem Granite Veeramani arrested in Pocso case. Central crime branch police conduct raid at 10 places.