Chef Dhamu: கின்னஸ் சாதனையாளர்! 'பத்ம ஸ்ரீ ' செஃப் தாமு காலமானார்! டாக்டரான முதல் இந்திய சமையலர்!

  • சென்னை: பிரபல சமையல் கலை நிபுணர் பத்மஸ்ரீ செஃப் தாமு என்கிற கே. தாமோதரன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 72. சமையல் கலைத் துறையில் நீண்ட கால சேவைக்காக கடந்த ஆண்டு உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தார்.

    Advertisement

    பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு (கே.தாமோதரன்) அண்மைக்காலமாக குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். இவர் ஏற்கெனவே பிரபல சமையல் கலைஞராக பல்வேறு சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

    Advertisement

    இவர் சமையல் குறித்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை காலமானார்.

    முதல் இந்தியர்

    2004-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் உணவக மேலாண்மை, சமையல் கலை தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய சமையல் நிபுணர் இவர். கடந்த 2010-ஆம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

    கின்னஸ் ரெக்கார்டு

    அதாவது ஒரே நாளில் 190 கிலோ எடை கொண்ட 617 உணவு வகைகளை அவர் சமைத்திருந்தார். இதை 24 மணி நேரம் 30 நிமிடங்கள், 12 வினாடிகளில் சமைத்து முடித்தார். தமிழகத்தின் 15 நகரங்களில் தி இந்து நாளிதழ் நடத்திய "நமது மாநிலம், நமது சுவை" என்ற போட்டியின் நடுவராகவும் இருந்தார்.

    Advertisement

    குக் வித் கோமாளி

    இவர் கள்ளப்படம், உள்குத்து, ஒரு பக்க கதை, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் சில தோற்றங்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி சீசன் 1 முதல் சீசன் 5 வரை நடுவராக பங்கேற்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். பத்மஸ்ரீ விருதை பெற்றது மட்டுமில்லாமல் வாழ்நாள் சாதனையாளர் விருது, லண்டன் உலகத் தமிழ் அமைப்பால் கடந்த 2021 இல் பெற்றார்.

    யார் இவர்?

    இவர் சென்னையில் 1954 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் தாமோதரன் கோதண்டராமன் என்பதாகும். சமையல் நிகழ்ச்சிகளில் தாமு அப்பா என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

    Advertisement

    முழங்கால் வலி

    செஃப் தாமு நீண்ட நாட்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் சென்னையில் ஒரு மருத்துவமனையில் ஊசி மூல்ம சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அரையிறுதி போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.

    இதனால் இவருக்கு பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா சொல்லப்பட்டது. ஆனால் கால் வலிக்காக ஊசி போட்டுக் கொண்டதால் ஓய்வு இருப்பதாக அவரே வீடியோ வெளியிட்டிருந்தார்.

    பத்மஸ்ரீ

    கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட செஃப் தாமு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் "எனக்கு சொல்ல முடியாத ஆனந்தம் இருக்கிறது. எதிர்பார்க்காத ஒன்று. இவ்வளவு பெரிய தேசிய விருது கிடைப்பது பெருமையாக இருக்கிறது. இது போன்று விருதுகள் இருப்பது தற்போது சமையல் கலை பயிலும் மாணவர்களுக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது.

    Advertisement

    சமையல் கலைக்கு அங்கீகாரம்

    இந்த விருதை மத்திய அரசு எனக்கு கொடுப்பதை நான் சந்தோஷமாக கருதுகிறேன். இந்த விருது எனக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்! இதனால் எனக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கிறது. இந்த விருதை சமையல் கலை படிக்கும் மாணவர்களுக்கும், ஓட்டல்களில் இருக்கும் செஃப்களுக்கும் நான் டெடிகேட் செய்கிறேன். சமையல் தொழில் அங்கீகரிக்கப்படாமல் இருக்கிறது, மாநில அரசும் கலைமாமணி உள்ளிட்ட விருதுகளை கொடுத்தால் எங்களை போன்றோருக்கு ஊக்கமாக இருக்கும் என்றார்.

    English Summary

    Guiness recorder, padma awardee Chef Dhamu died of health issues. He was admitted at Chennai Apollo hospital.