செங்கல்பட்டு ஸ்டேஷன் வாசலில் கைவிலங்குடன் கிடந்த பொருள்.. போலீஸே இப்படி செய்யலாமா? ஆடிப்போன மக்கள்

  • சென்னை: செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஒரு விசித்திரமான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நடந்த இந்த சம்பவம் குறித்த போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. என்ன நடந்தது?

    Advertisement

    சமீபத்தில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராகப் பணியாற்றிய திருமதி தாமரைச்செல்வி, பணி முடித்து வீடு திரும்பியபோது கணவர் அரவிந்தனால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

    Advertisement

    தமிழக காவல்துறை

    குடும்பப் பிரச்சினை தொடர்பாக இருதரப்பிலும் காவல்துறையின் கவனத்திற்கு புகார்கள் சென்றிருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில், பிரச்சினை உயிரைப் பறிக்கும் அளவுக்கு தீவிரமடைந்ததைத் தடுக்க காவல்துறை எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வி பரவலாக எழுந்தது.

    அதனால்தான் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? புகார்கள் இருந்தும் ஒரு உயிரை காப்பாற்ற முடியாதது ஏன்? என்று வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

    போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா

    அதேபோல சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகப் பெண்களைப் பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடிப்படையை உருவாக்கியுள்ளோம் என முதலமைச்சர் விஜய் மேடையெங்கும் பெருமை பேசி வரும் வேளையில், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவி வருவது கொடூரமானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியிருந்தார்.

    Advertisement

    செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன்

    இப்படிப்பட்ட சூழலில் போலீசாரின் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இல்லையா என்பது போல ஒரு சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து, அதிர்வலைகளை உண்டு பண்ணி வருகிறது.

    நேற்று செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்திற்குள் நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ்காரரின் பைக்கில், ஹெல்மெட் திருடு போய்விடாமல் இருக்க, அதில் கைவிலங்கு கொண்டு பூட்டப்பட்டிருந்தது. இதனை நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் அங்கு சாட்சிகளுக்காக வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    பொதுவாக, குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொடூர குற்றவாளிகளையும், பிடிவாரண்ட் குற்றவாளிகளையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவும், ஜெயிலில் பாதுகாப்பாக அடைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான அரசுப் பொருளான கைவிலங்கு, சாதாரண ஒரு ஹெல்மெட்டிற்குப் பூட்டாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை யாரோ போட்டோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு விட்டனர். இதை பார்த்து நெட்டிசன்களும் அதிர்ச்சியைடந்தனர்.

    Advertisement

    ஹெல்மெட்டுக்கு கைவிலங்கு?

    போலீஸ் ஸ்டேஷன் என்பது நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயமின்றி வந்து செல்லும் ஒரு பொது இடம்.. அப்படிப்பட்ட ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு காவலரின் ஹெல்மெட்டிற்குப் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அங்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்?

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையினர், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு அதிகாரத்தையும் அரசுப் பொருட்களையும் இப்படிப்பட்ட சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படி விதிகளுக்குப் புறம்பாக செய்யலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    Advertisement

    அதுமட்டுமல்ல, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கைவிலங்கை தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் பயன்படுத்துவது துறை ரீதியான விதிமீறலாகும் என்பதால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

    English Summary

    Chengalpattu Police Station Helmet.. Why Was a Handcuff Used to Lock It? Viral Photo Sparks Questions