சென்னை அடையாறில் பட்டப்பகலில் பயங்கரம்! இளைஞர் வெட்டிக்கொலை! இன்ஸ்டாவில் ஸ்டேடஸ் வைத்த கொலையாளிகள்

  • சென்னை: சென்னை அடையாறில் இன்று காலை 10 மணியளவில் இளைஞர் ஒருவர் 3 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த இளைஞரை பைக்கில் வந்த 3 பேர் கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

    Advertisement

    கொலை செய்துவிட்டு அந்த இளைஞர்கள் 3 பேரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவும் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் பட்டப்பகலில் கொலை

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் மைத்ரேயன் (வயது 21). இன்று காலை 10 மணியளவில் தந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் திடீரென ஆட்டோவில் வந்த மைத்ரேயனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பட்டப்பகலில் இளைஞர்கள் 3 பேரும் சேர்ந்து கொன்றுவிட்டு தப்பி செல்வது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இதற்கிடையே இன்று மாலை சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஜீவா, அசாருதீன் ஆகிய இரண்டு பேர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கொலையான மைத்ரேயன் ரவுடி என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்துள்ளது.

    Advertisement
    சென்னை லைட் ஹவுஸ் to அடையாறு வரை உயர்மட்ட பாலம் - போக்குவரத்து நெரிசலை குறைக்க மாஸ்டர் பிளான்!

    கைதான ஜீவாவை கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு கும்பல் வெட்டியுள்ளது. இந்த வழக்கில் மைத்ரேயனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் இருவருக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே அவர் வேறு வழக்கில் சிறை சென்றுவிட்டதால் காத்திருந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மைத்ரேயன் கடந்த 21 ஆம் தேதி தான் நிபந்தனை ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து தினமும் காலை 10.30 மணியளவில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு வந்துள்ளார். மயிலாப்பூரில் சக ரவுடிகளுடன் பிரச்சினை இருந்து வந்துள்ளதால் இவர் திருவான்மியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தபடி மயிலாப்பூர் காவல் நிலையம் வந்து சென்றுள்ளார்.

    Advertisement

    இன்று காலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட்டு சென்ற போதுதான் இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

    English Summary

    Chennai Adyar: A young man was hacked to death by a three-member gang in Adyar, Chennai, around 10:00 AM today, an incident that has caused a shock. Video footage has emerged showing the three individuals—who arrived on a motorcycle—attacking the young man (who had arrived in an auto-rickshaw) and subsequently fleeing the scene.