எங்கயா இங்க இருந்த சென்னையைக் காணோம்.. ஒரே புகைமூட்டமா இருக்கு! மணலியில் என்னாச்சு பாருங்க! ஷாக்!

  • சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அதிக அளவில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு அதிகரித்துள்ளது மணலி பகுதியில் மட்டும் காற்றின் தர குறியீடு 246 பதிவாகியுள்ளது ராயபுரத்தில் 153 ஆகவும் அரும்பாக்கம் கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    Advertisement

    தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.

    Advertisement

    அதே நேரத்தில் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவதும் தொடர்ந்து கவலை அளித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பசுமைப் பட்டாசுகளை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுப்புறக் காற்று மாசு மற்றும் ஒலி மாசு அளவை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

    Advertisement

    அதன்படி, சென்னையின் மணலி பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 246 ஆகப் பதிவாகியுள்ளது. ராயபுரம் பகுதியில் 153 என்ற அளவில் காற்றுத் தரக் குறியீடு இருந்தது. அதே நேரத்தில் அரும்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் திருப்திகரமான நிலையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி நாளில் வழக்கத்தைவிட அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் புகை மற்றும் நுண்துகள்களின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் பட்டாசுப் புகையிலிருந்து முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    Advertisement

    தீபாவளி கொண்டாட்டங்களுக்கு இடையே காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க என்கின்றனர் அதிகாரிகள்.

    English Summary

    Chennai's Manali recorded an AQI of 246 after Diwali celebrations, while Royapuram registered 153, pollution officials reported.