சென்னை: சென்னை சர்வதேச விமான நிலைய சரக்கு முனையத்தில் லாரிகள் மணி கணக்கில் காத்துக் கிடப்பது தொடர் கதையாக இருக்கிறது. இதன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு முகவர்கள் கடும் அவதிக்குள்ளாவதும் காலம் காலமாக நடக்கிறது. இது ஒருபுறம் எனில், சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களுக்கான நேரக் கட்டுப்பாடுகளும் நிலைமை சிக்கலாக்கியிருக்கிறது. இந்த சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது இந்திய விமான நிலைய ஆணையம்.
இதற்காக சென்னை விமான நிலைய வளாகத்தில் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் வசம் உள்ள 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடிக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வாங்கும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏர் இந்தியா நிலம் சென்னை விமான நிலைய இயக்குனர் எம்.ராஜா கிஷோர் இதுபற்றி மேலும் கூறுகையில், சென்னை விமான நிலைய வளாகத்தில் ஏர் இந்தியா அசெட்ஸ் ஹோல்டிங் லிமிடெட் வசம் உள்ள 19.06 ஏக்கர் நிலம் முழுமையாகக் கைக்கு வந்ததும், அது சரக்கு லாரிகளுக்கான பிரத்யேக பார்க்கிங் பகுதியாக மாற்ற முடிவு செய்துளளோம். மேலும், லாரிகளின் வரத்தையும் புறப்பாட்டையும் முறைப்படுத்த 'டோக்கன் சிஸ்டம்' அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் 'டெர்மினல் 5'கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி கட்டுவதாக இருந்தால், தேசிய நெடுஞ்சாலை 32-உடன் இணைக்கும் உயர்மட்டப் பாதை அமைத்தால் தான் சாத்தியமாகும். இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது. சென்னை விமான நிலையத்தின் ஒரு பகுதி அடையாறு ஆற்றில் தான் செல்கிறது.இந்த சூழலில்ல உயர்மட்ட பாலம் அமைப்பதாக இருந்தால் பாலத்தின் தூண்கள் அமைப்பதால் அடையாறு ஆற்றின் நீர் ஓட்டம் பாதிக்கப்படக் கூடாது என்று அதிகாரிகள் விரும்புகிறர்கள். இது குறித்து நீர்வளத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்களுடன் விமான நிலைய அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர். முன்னதாக உயர்மட்ட பால திட்டத்திற்கு ஐஐடி மெட்ராஸ் ஏற்கனவே நடத்திய ஆய்வில் பச்சைக்கொடி காட்டியிருந்தது. தற்போது நீர்வளத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நிலம் கையகப்படுத்துவதில் கூடுதல் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், திட்டப் பாதை எப்படி செல்ல வேண்டும் என்பது குறித்து மீண்டும் பரிசீலிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர், இந்தத் தொழில்நுட்ப ஆய்வுகள் அனைத்தும் நீர்வளத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சுயாதீனமான ஆய்வுகள் என்றும், விமான நிலையத்தின் வேலை என்பது முனையத்திற்கான இணைப்பு பாதையைக் கோருவது மட்டுமே என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். இப்படி தெளிவுப்படுத்த காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் டெர்மினல் 5க்கு உயர்மட்ட பாதை தாமதமாகினால் அல்லது நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டால், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் என எல்லாருமே இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை கையை காட்டி நீங்கள் தான் காரணம் என்று மொத்தமாக கூறுவார்கள் அதற்கு தான், "நாங்கள் டெர்மினல் 5-க்கு இணைப்புப் பாதை வேண்டும் என்று கோரிக்கை மட்டுமே வைத்துள்ளோம். பாதையை மாற்றுவது, நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவது எல்லாமே நீர்வளத்துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தான்; இதில் எங்கள் தவறோ அல்லது தாமதமோ எதுவும் இல்லை" சுட்டிக்காட்டவே இப்படி தெளிவுபடுத்தி உள்ளார் விமான நிலைய இயக்குனர்.டெர்மினல் 5 இணைப்பு பாதையில் உள்ள சவால்கள் என்
மெட்ராஸ் ஐஐடி பச்சைக்கொடி
விமான நிலைய இயக்குனர் விளக்கம்
ஏன் தெளிவுப்படுத்தினார்