சென்னை: சென்னை விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின்கள் இல்லை என சீரியல் நடிகை லதா ராவ் கூறியிருந்ததற்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தில் லேடிஸ் ரெஸ்ட் ரூம்களில், சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்களை செயல்பாட்டில் இருந்தன. அதை தவறாக உபயோகிப்பதாக புகார்கள் வந்ததால் அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
அதற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு லேடிஸ் ரெஸ்ட் ரூம்களிலும் சானிட்டரி நாப்கின் அவசர தேவைக்கு தொடர்பு கொள்ளவும் என போன் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நம்பரில் தொடர்பு கொண்டால் (8220021129) அடுத்த இரு நிமிடங்களில் விமான நிலையப் பெண் ஊழியர் சானிட்டரி நாப்கின் கொண்டு வந்து கொடுப்பார். இது தற்காலிக ஏற்பாடுதான் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மெட்டி ஒலி உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் லதா ராவ். இவர் சீரியல் நடிகர் ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு லதா ராவ் வந்திருந்தாராம். அப்போது அவருக்கு எதிர்பாராதவிதமாக வழக்கமாக வரும் தேதிக்கு முன்பாகவே (due date) மாதவிடாய் ஏற்பட்டதாம். இதனால் அவர் சானிட்டரி நாப்கின் பெறுவதற்காக பெண்கள் கழிப்பறைக்குச் சென்றாராம். அங்கு நாப்கின் வழங்கும் வெண்டிங் மெஷின் வசதி இல்லையாம். தான் எப்போதுமே தனது கைப்பையில் நாப்கினை வைத்திருப்பாராம். ஆனால் அந்த நேரத்தில் அவர் மறந்துவிட்டுவிட்டாராம். இதையடுத்து அவர் விமான நிலைய வளாகத்தில் உள்ள மருந்தகத்திற்கு சென்ற போது அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை என்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளானாராம். விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் இது போன்ற ஒரு அலைச்சல் ஏற்பட்டதால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் வீட்டைவிட்டு வெளியே செல்லும் பெண்கள், எப்போதும் நாப்கின் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். லதா ராவின் இந்த பதிவு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் நாப்கின் வெண்டிங் மெஷின் வைக்கக் கூடாதா என்று பலரும் லதா ராவுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியிருந்தனர். அது போல் மேக்கப் ஐட்டங்கள் எல்லாம் கொண்டு போகும் போது நாப்கினையும் கொண்டு செல்ல முடியாதா, இதற்கெல்லாம் அடுத்தவர்களை குறை சொல்வீர்களா என்று லதா ராவுக்கு எதிராகவும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. சானிட்டரி நாப்கின்கள் தற்போது பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் வெண்டிங் மெஷின் மூலம் கிடைக்கப் பெறுகிறது. விலை 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என இருக்கும். ஆனால் இலவசமாக கொடுக்கப்பட வேண்டும் என நிறைய பேர் கோரிக்கை விடுத்துள்ளனர். இலவசமாக வைத்தால் பலரும் அதன் பயன்பாடு நீர்த்து போகும் அளவுக்கு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.உதவி எண்
மாதவிடாய் பிரச்சினை
கழிவறையில் நாப்கின் இல்லை
மெடிக்கல் ஷாப்
வீட்டை விட்டு செல்லும் பெண்கள்
பெரிய விமான நிலையம்
இலவச நாப்கின்கள்