விஜய் 200 யூனிட் ஃப்ரீ மின்சாரம்னு அறிவிச்ச! அடுத்த செகன்ட்டே பவர்கட்! அமைந்தகரை மக்கள் கொதிப்பு

  • சென்னை: 200 யூனிட் இலவச மின்சாரம் என முதல்வர் விஜய் சொன்ன அடுத்த நொடியில் இருந்து பவர்கட் இருந்து வருகிறது என சென்னை அமைந்தகரை மக்கள் கொந்தளிப்புடன் அண்ணா ஆர்ச் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Advertisement

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியிருப்பதாவது: தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களாக எங்கள் பகுதியில் மின்வெட்டு இருந்து வருகிறது. இரவு 11 மணிக்கு போன கரன்ட் மணிக்கணக்காகியும் வரவில்லை. இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் எடுக்கவில்லை.

    Advertisement

    தலைமைச் செயலகத்திலும் கரன்ட் கட், அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களிலும் கரன்ட் கட்.. தமிழகமே கடந்த 4 மாசமா இருளில் மூழ்கியுள்ளது. ஒரு நாளைக்கு 4 முறை கரன்ட் கட்டாகுது. பாத்ரூம் போக கூட தண்ணீர் இல்லை. கரன்ட் இருந்தால்தானே மோட்டர் போட முடியும்? எம்எல்ஏ வராமல் இந்த இடத்தை விட்டு நாங்கள் நகர மாட்டோம்.

    ரூ 35-க்கு மின்சார கொள்முதல் செய்யாவிட்டால் 3 மணி நேரம் மின்வெட்டு! நிர்மல் குமார் விளக்கம்

    எம்எல்ஏ வந்தாகணும்

    ஓட்டு கேட்க மட்டும் எம்எல்ஏவுக்கு வர தெரியுதுல்ல, இப்ப வரட்டும். இந்த மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம், விஜய் 200 யூனிட் ஃப்ரீனு எப்ப சொன்னாரோ அப்போது முதல் கரன்ட் கட் என்றனர்.

    Advertisement

    5 மணி நேரமாக மின்வெட்டு

    சென்னை அமைந்தகரை பகுதியில் நேற்று இரவு 11 மணி முதல் 5 அல்லது 6 மணி நேரமாக மின்வெட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. தினந்தோறும் மின்வெட்டு ஏற்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அண்ணா ஆர்ச் சாலையில் வந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

    பேச்சுவார்த்தை

    தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் எம்எல்ஏ வராமல் போக முடியாது என மக்கள் மறுத்துவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின் வெட்டு பிரச்சினை தினந்தோறும் தொடர்கதையாகி வருகிறது. தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் தமிழகத்தில் ஆங்காங்கே மின்வெட்டால் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    Advertisement

    இருளில் மூழ்கிய தலைமைச் செயலகம்

    இத்தனை நாட்களாக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில்தான் மின்வெட்டு இருந்தது. நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் ஒரு தளமே இருளில் மூழ்கியது.

    ₹20 டெண்டரே ஊழல் என்றால்.. ₹35 க்கு மின்சாரம் வாங்குவது என்ன கணக்கு? விஜய் அரசுக்கு கேள்விகள்

    மின்சார வாரியம் விளக்கம்

    இதுகுறித்து மின்சார வாரியம் கூறிய விளக்கத்தில் சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (12.10.2026) காலை மின்விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது.

    Advertisement

    நடந்தது என்ன?

    தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின்சுவிட்சுகளில், ஒரு சுவிட்ச்-சின் பி-பேஸ் (B-Phase) மின்விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதைச் சரி செய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.

    இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின்விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் மின்விநியோகம் சீராக உள்ளது. இவ்வாறு தெரிவித்திருந்தது.