பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க!

  • சென்னை: சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் இந்திய அரசு இணைந்து ஐடிஐ 8, 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்காக தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடத்துகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளர்களுக்கு ரூ 18 ஆயிரம் வரை மாதாந்திர உதவித் தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

    Advertisement

    பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற ஜூன் 10 அன்று காலை 9.30 மணியளவில் வட சென்னை-32 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது.

    இதில் அரசு மற்றும் தனியார் தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.

    Advertisement

    தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) 2 குறைந்தபட்சம் ரூ.8000 முதல் அதிகபட்சமாக ரூ,18000 வழங்கப்படும்.

    இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in கல்வி சான்றிதழ்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The Chennai District Skill Training Office, in collaboration with the Government of India, is organizing a National Apprenticeship Training Camp for candidates who have completed ITI, Class 10, or Class 12. Selected trainees will receive monthly stipends of up to ₹18,000, providing valuable skill development and employment opportunities for young job seekers.