சென்னையில் காவல்துறை பாதுகாப்பில் இருந்தவர் தப்பி ஓட்டம்! பொதுமக்கள் அதிர்ச்சி

  • சென்னை: சென்னை கொளத்தூரில் ஆட்டோ ஓட்டுநரான முதியவர் டேவிட் (60) குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். போலீஸ் பாதுகாப்பில் இருந்த டேவிட் தப்பி ஓடியுள்ளார்.

    8 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மக்கள், டேவிட்டை அடித்து துவைத்து.. போலீசிடம் ஒப்படைத்திருக்கின்றனர். காயங்களுடன் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கிருந்து தப்பித்திருக்கிறார். போக்சோ விசாரணை கைதி ஒருவர் தப்பியிருப்பது கொளத்தூர் மக்கள் மட்டுமல்லாது, மொத்த சென்னை மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    தொடரும் கைதிகள் எஸ்கேப்

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சிறை கைதிகள் தப்பி செல்லும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. குறிப்பாக தேனி கிளைச்சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு குறித்தும், சமூக பாதுகாப்பு குறித்தும் தமிழ்நாட்டை பெருமையாக பேசிய ஊடகங்கள், தற்போது சிறை கைதிகள் தப்பியதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கின்றன. தேனியை தொடர்ந்து இன்று கோவை மத்திய சிறையிலிருந்து ஒருவர் தப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கொஞ்ச நேரத்திற்கு முன்பு, சென்னையில் போக்சோ விசாரணை கைதி தப்பியிருக்கும் சம்பவம் காவல்துறை மீது சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

    கைதிகள் தப்பிக்கும் சம்பவம் குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

    அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

    'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

    English Summary

    Chennai: In Kolathur, Chennai, an elderly auto-rickshaw driver named David (60) was caught by the public for sexually molesting children and handed over to the police. David, who was under police custody, has since escaped.