மொத்த தமிழ்நாடும் ஸ்தம்பிக்க போகுது.. முதல்வர் விஜய்க்கு புது நெருக்கடி! சிக்கலில் அரசு!

  • சென்னை: கடந்த 13 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், நாளை மறுநாள் சட்டமன்றத்தில் நடைபெற உள்ள போக்குவரத்து மானிய கோரிக்கையின்போது, முதலமைச்சர் விஜய் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவிக்காவிட்டால் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    சென்னையில் ஆட்டோக்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எதுவும் கிடையாது. ஆட்டோ ஓட்டுநர் சொல்வதுதான் ரேட்.. திறமையிருந்தால் பேரம் பேசி போகலாம். இது பயணிகளுக்கும் சரி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சரி பிரச்சனைக்குரிய விஷயம்தான். எனவே, அரசு ஒரு கட்டணத்தை நிர்ணயித்தால், அதை வைத்து இரு தரப்பினரும் பயனடைவார்கள். ஆனால், இதுவரை அரசு கட்டணத்தை நிர்ணயித்து அறிவிக்கவில்லை.

    Advertisement

    இப்படி இருக்கையில்தான் முதலமைச்சர் விஜய்க்கு ஆட்டோ-டாக்ஸி ஓட்டுநர்கள் டிமாண்ட் வைத்திருக்கிறார்கள். ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் இது குறித்து பேசியதாவது, "தமிழகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2022ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்பட மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து, அதை மக்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் கடந்த 9ம் தேதி இது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. அதில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. நாங்கள் 1.5 கி.மீக்கு ரூ.60 நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்தடுத்த 1 கி.மீக்கு ரூ.30ம், வெயிட்டிங் சார்ஜ் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய், இரவு நேர கட்டணமாக 1.5 மடங்கு நிர்ணயிக்க வேண்டும் என்று விரிவான மனு அளித்திருந்தோம்.

    Advertisement

    இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி.. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இன்று போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அறிவிப்பு வெளியாகவில்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை.

    நாளை மறுநாள்.. சட்டமன்றத்தில் போக்குவரத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அப்போது முதலமைச்சர் விஜய் இந்த கட்டண உயர்வு குறித்து அறிவிப்பார் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால்.. 29ம் தேதி அனைத்து சங்கங்களும் கூடி ஆலோசித்து.. வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    ஏற்கெனவே தவெக அரசுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இப்படி இருக்கையில், தற்போ ஆட்டோ தொழிலாளர்களும் போராட்டத்தை அறிவித்தால்.. தமிழ்நாடு நிச்சயம் ஸ்தம்பிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    Topics: #auto #vijay #tvk

    English Summary

    Chennai Auto Unions Threaten Protest: Auto-rickshaw meter fares in Tamil Nadu have not been raised for the past 13 years. Auto and taxi workers have warned that Chief Minister Vijay must announce a fare hike during the debate on transport demands in the Legislative Assembly the day after tomorrow, adding that they will go on strike if such an announcement is not made.