சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து?

  • சென்னை: கடந்த சில வாரங்களாக சென்னையில் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறைக் காலம் என்பதால் மக்கள் குடும்பத்தோடு சுற்றுலா செல்லும் இந்த நேரத்தில், நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் பிக்கப் ஆகத் தொடங்கியிருப்பது சென்னைவாசிகளை சற்றே கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    கடந்த 2019 இறுதியில் பரவிய கொரோனா பாதிப்பை நம்மால் மறந்துவிட முடியாது. சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனா பாதிப்பு மிக ஒட்டுமொத்த உலகையும் மிக மோசமாகப் பாதித்தது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை ஒட்டுமொத்த உலகமும் பல காலம் ஸ்தம்பித்துப் போனது. அதில் இருந்து மீண்டு வரவே நமக்குப் பல ஆண்டுகள் ஆனது.

    Advertisement

    கொரோனா

    வேக்சின், தனிமைப்படுத்துதல் என நீண்ட போராட்டத்திற்கு பிறகே கொரோனாவை நம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. இதற்கிடையே தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறதாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு எடுக்கப்படும் 'ஃப்ளூ பேனல்' சோதனைகளில் கொரோனா தொற்று பாசிட்டிவ் என வருவது அதிகரித்துள்ளது.

    இது தொடர்பாக பொது சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், "கொரோனா பரவித் தான் இருக்கிறது. கோடை காலமான மே முதல் ஜூலை வரையிலான மாதங்களில் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் வருபவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனைகளைப் பரிந்துரைக்கின்றன. தற்போதைக்கு எந்தவொரு புதிய, ஆபத்தான, வீரியமிக்க வேரியண்ட்டுகளும் கண்டறியப்படவில்லை. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை" எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    Advertisement

    மீண்டும் அதிகரிப்பு

    சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தொற்றுநோயியல் மூத்த ஆலோசகர் மருத்துவர் சுரேஷ் குமார் இது குறித்து சில முக்கிய விபரங்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர், "காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், கடுமையான சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் சுவையின்மை போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வருகிறார்கள்.

    தற்போதைய அலையில் பெரும்பாலானோருக்குப் பாதிப்பு லேசானதாக இருந்தாலும், 50 வயதைக் கடந்தவர்கள், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிற நோய் பாதிப்பு உள்ள சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்படுகிறது. சிலர் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டி அளவுக்கு நிலைமை மோசமானது. தற்போது சந்தையில் புதிய பூஸ்டர் தடுப்பூசிகள் தட்டுப்பாடாக இருப்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அத்தியாவசியம்" என்றார்.

    Advertisement

    சீசனல் தொற்று

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைத் தலைவரான பேராசிரியர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர் இது தொடர்பாகக் கூறுகையில், "கொரோனா இந்த உலகை விட்டு முற்றிலும் மறைந்துவிடவில்லை.. மாறாக அது இப்போது ஒரு குறிப்பிட்ட காலநிலையில் வரக்கூடிய 'சீசனல்' நோயாக மாறிவிட்டது. தற்போது கோடை விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்தோடு சுற்றுலா மற்றும் பொது இடங்களுக்குப் பயணிக்கிறார்கள்.

    மக்கள் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களுக்குச் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது, இருமும் போது கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது போன்ற அடிப்படைகளை மறக்கக் கூடாது. உடல்நிலை சரியில்லாதவர்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்!" என்றார்.

    Advertisement

    கவனம் தேவை

    சென்னையில் கொரோனா கேஸ்கள் மெல்ல உயர்வது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி! தற்போது ஆப்பிரிக்காவில் எபோலா அச்சுறுத்தல் காரணமாக ஏர்போர்ட்டில் ஸ்கிரீனிங் நடக்கும் இந்தச் சூழலில், நம்ம சென்னையிலும் மக்கள் மீண்டும் தங்களின் சுயக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். லேசான காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருக்காமல், முதியவர்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வதே முக்கியம்!

    English Summary

    Health officials and top doctors from Apollo and Stanley hospitals in Chennai have urged caution as COVID-19 cases(சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்): Raise of Chennai corona cases.