சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.. ஆணையர் சமீரன் கொடுத்த விளக்கம்!

  • சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை என்று ஆணையர் சமீரன் விளக்கம் கொடுத்துள்ளார். ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆணையர் சமீரன், ஆட்சேபணை இருப்பின் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பு அடிப்படையில் சொத்து வரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல் கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப சொத்து வரி விதிக்கப்படுகிறது.

    Advertisement

    சொந்த வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் வைத்துள்ளவர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி இருக்கிறது. இதனை வசூலிக்க சென்னை மாநகராட்சி சார்பாக முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் சொத்து வரி கட்டிய உரிமையாளாருக்கு, தற்போது ரூ.28 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பலரும் சொத்து வரி அதிகமாக வந்துள்ளதாக பேசி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையம் சமீரன் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி மாநகராட்சி ஆணையர் சமீரன், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    ஒருவேளை சொத்து வரி விதிப்பில் ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது என்பது உண்மைக்கு மாறான தகவல் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    Chennai Corporation: No Increase in Property Tax clarifies Chennai Corporation Commissioner Sameeran