சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என நம்பிக்கையாக இருக்கிறாராம் முதல்வர் விஜய். இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் தவெக தான் வெற்றி பெறும் என்று முதல்வரின் ஆலோசகர்களும் அமைச்சர் களும் உறுதியாகச் சொல்வதால், அந்த வெற்றியின் தாக்கம் குறைவதற்குள் உள்ளாட்சித் தேர்தலையும் தமிழகம் முழுவதும் நடத்தலாமே என்கிற யோசனையும் முதல்வருக்கு இருக்கிறதாம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிந்த நிலையிலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்னும் 5 தொகுதிகள் காலியாகவே உள்ளன: 1. பெருந்துறை (ஈரோடு மாவட்டம்) 2. கரூர் (கரூர் மாவட்டம்) 3. திருச்சிராப்பள்ளி கிழக்கு (திருச்சிராப்பள்ளி மாவட்டம்) 4. விராலிமலை (புதுக்கோட்டை மாவட்டம்) 5. அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்)
இந்த ஐந்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தலையும் விரைந்து நடத்தலாம் என்கிற முடிவில் இருப்ப தால், கள நிலவரம் எப்படி இருக்கிறது? அனைத்து இடங்களுக்கும் தகுதியான வேட்பாளர்கள் தவெகவில் இருக்கிறார்களா? என்பது குறித்து ஒரு அறிக்கை தருமாறு ஆலோசகர்களிடம் வலியுறுத்தியுள்ளார் முதல்வர் விஜய் என்கிறார் கள். இதற்கான கள நிலவரத்தை அறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பும் களத்தில் குதிக்கவிருக்கிறது. இதற்கிடையே, திமுகவின் கோட்டையாக இருந்த சென்னை, சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் கோட்டையாக மாறி நிற்கிறது. அதேபோன்ற ஒரு வெற்றி சென்னை மாநகராட்சியில் கிடைக்குமா? என்கிற கேள்வியுடன் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் விவாதிக்கப்பட்டுள்ளன. அப்போது, சென்னை மாநகராட்சியின் எல்லைகள் மிக பெரிய அளவில் பரந்து விரிந்து கிடப்பதால், அதன் நிர்வாகத்தை ஒரே ஒரு மேயரால் பராமரி க்க முடிவதில்லை. நிர்வாக நலன்களுக்காக மாவட்டங்களை பிரிப்பதை அரசாங்கம் எப்படி தீர்மானிக்கிறதோ, மாவட்ட கட்சி நிர்வாகத்தை எளிதாக நிர்வாகிக்க அரசியல் கட்சிகள் எப்படி அதன் எல்லைகளை சுருக்குகிறதோ, அதே போல, மாநகராட்சியின் எல்லைகளையும் சுருக்க வேண்டும். அதற்காக, சென்னை மாநகராட்சியை மூன்றாக உடைத்தால் ஆரோக்கி யமாக இருக்கும். அதாவது, தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என்று 3 மாநகராட்சிகளை உருவாக்கினால், தவெகவிற்கு 3 மேயர்கள் கிடைப்பார் கள். சென்னையை நிர்வகிப்பதும் எளிதாகும்; மத்திய அரசு மற்றும் வெளி நாடுகளின் நிதி உதவிகளையும் எளிதாக பெறமுடியும் ; அதிக அளவிலும் கிடைக்கும் என்கிற கருத்துக்கள் ஆராயப்படுகின்றன. மேலும், சென்னை யை 3 மாநகராட்சியாக பிரிக்கும் போது, திமுகவை தேர்தல் களத்தில் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று அரசியல் ரீதியாகவும் அலசப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் விஜய்யிடம் அமைச்சர்களும் ஆலோசகர்களும் விவாதிக்கவிருப்பதாகவும் சென்னையிலுள்ள தவெக மா.செ.க்களிடம் எதிரொலிக்கிறது. - சிறப்பு நிருபர் எழில்உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தலாம்
திமுகவின் கோட்டையாக இருந்த சென்னை
திமுகவின் பினாமி நிறுவனங்களுக்காகவே செயல்பட்ட சென்னை மாநகராட்சி! ராஜ்மோகன் கடும் குற்றச்சாட்டு
தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை