மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா! எல்-நினோவால் டெங்கு அதிகரிப்பு? சென்னைக்கு பெரிய வார்னிங்!

  • சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்திருக்கும் நிலையில் சென்னையில் மட்டும் 650க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எல்- நினோ தாக்கம் காரணமாக சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி ஒரே நாளில் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை அடுத்த நாளே 283 ஆக உயர்ந்தது. செப்டம்பர் 17ஆம் தேதி 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 19ஆம் தேதியும், 20ஆம் தேதியும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை வெளியாகவில்லை.

    டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

    தொடர்ந்து மூன்று நாட்களாக ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இந்த ஆண்டில் மொத்தமாக 17000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், சென்னையில் மட்டும் 654 பேருக்கு பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சுகாதார துறையும் இதனை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் எல்-நினோத் தாக்கம் காரணமாக சென்னை மாநகராட்சியில் டெங்கு தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Advertisement

    அதீத வெப்பம்

    2024 ஆம் ஆண்டு பாதிப்பை விட இந்த பாதிப்பு குறைவாக இருக்கிறது என புள்ளி விவரங்கள் சொன்னாலும் கடந்த சில தினங்களாக பாதிப்பு உறுதி செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதீத வெப்பம் நிலவுகிறது. மழை பெய்தாலும் பகலில் வெப்பம் சுட்டெரிக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்யும் நிலையில் பகல் நேர வெப்பத்தால் வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

    சென்னை டெங்கு

    திடீர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை தேங்குவதும் கொசு உற்பத்தியை அதிகரித்து டெங்கு பரவலுக்கு காரணமாக அமைவதாக அதிகாரிகள் சொல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பது வழக்கம் தான். ஜனவரியில் 20 சதவீதம் டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் ஆகஸ்டில் 50 சதவீதமாகவும், செப்டம்பரில் 80 சதவீதமாகவும் இருக்கும்.

    Advertisement

    654 பேருக்கு டெங்கு

    சென்னை மாநகராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சுமார் 5750 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் 2025-இல் 4780 ஆக இருந்தது. இந்த நிலையில் செப்டம்பரில் தற்போது சென்னையில் மட்டும் 650 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு பாதிப்பை ஒப்பிடும்போது இந்த பாதிப்பு குறைவு தான் என்றாலும் பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கிறது என அதிகாரிகள் சொல்கின்றனர்.

    சுகாதாரத்துறை

    அதே நேரத்தில் பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கா வண்ணமும், வீடுகளுக்குள் கொசுக்கள் புகா வண்ணமும் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும், வீட்டு முறை வைத்தியம் மற்றும் தாங்களாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

    English Summary

    Chennai records 654 dengue cases as Tamil Nadu crosses 17,000 infections, with officials warning about rising transmission risks.