திமுக ஜென் Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது ரத்து! கோர்ட் அதிரடி! தவெகவுக்கு பின்னடைவு

  • சென்னை: திமுகவின் ஜென் Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது செய்யப்படவில்லை என சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அவரை போலீஸார் விடுவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    தாம்பரத்தைச் சேர்ந்தவர் சரண் ஜெயராமன். இவர் அமைச்சர் சரத்குமார் போதை மருந்து பயன்படுத்துவதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    இந்த வீடியோவை அமைச்சர் மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த வீடியோவால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாக சரண் ஜெயராமன் கூறியிருந்தார்.

    இவர் திமுக ஆதரவாளர். திமுகவின் ஜென் Z செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் தவெக பெண் நிர்வாகிகளை விமர்சித்ததாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் மீது பெண் நிர்வாகிகள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு அவரது வீட்டின் மாடியில் வைத்து கொளத்தூர் போலீஸார் சரணை கைது செய்தனர். இதையடுத்து அவரை இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

    Advertisement

    அப்போது நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போது அவரது கைதை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் சரண் ஜெயராமன் கைதை நீதிபதி ரத்து செய்ததால் அவரை விடுவிக்க வேண்டிய நிலை போலீஸாருக்கு ஏற்பட்டது.

    சரண் ஜெயராமன் கைதுக்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே அவதூறு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட போது நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது விஜய் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.