எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது?

  • சென்னை: மது பாட்டிலுக்கு எம்ஆர்பியைவிட 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பாட்டிலை திரும்ப பெறும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இது எப்படி செயல்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

    Advertisement

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் எம்ஆர்பியை விட 20 ரூபாய் அதிகம் விற்கப்படுகிறது. இது நியாயமா?" என்ற கேட்காத குடிமகன்களே இல்லை.. பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டுப்பாடி செந்தில் பாலாஜியை அன்று கிண்டல் செய்த இன்றைய முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தீராத தலைவலியாக இருக்கிறது.

    Advertisement

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கவும் "டாஸ்மாக் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் தானியங்கி இயந்திரம்" நிறுவ தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.

    டாஸ்மாக் ஊழியர்களை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தாமல், முழுக்க முழுக்க இயந்திரம் மூலமாகவே காலி பாட்டில்களைப் பெற்றுக்கொண்டு, அதற்குரிய தொகையை நேரடியாக குடிமகன்களுக்கே வழங்கும் இந்த அதிநவீன திட்டம், தற்போது சோதனை முறையில் எழும்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுபாட்டில்களை கொடுத்தால் 10 ரூபாய் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த மதுக்கடையில் உள்ள ஏஐ டாஸ்மாக் இயந்திரத்தில் ஸ்கேன் செய்யும் ஆப்ஷன் உள்ளது. அதில் ஸ்கேன் செய்த பின்னர், உள்ளே போட வேண்டும். அப்படி போட்டால் டிஜிட்டல் முறையில் அல்லது ரொக்கமாகவோ திரும்ப பெறும் வகையில் சிஸ்டம் வைக்கப்பட்டுள்ளது.இதில் குடிமகன்கள் ஆர்வமுடன் போட்டு பணத்தை திரும்ப பெற்று செல்கிறார்கள்.

    Advertisement

    இந்த ஏஐ இயந்திரம், அந்த கடையின் நம்பரில் உள்ள பாட்டில்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும், பிற கடைகளை ஏற்றுக்கொள்ளாது. அதனால் பிறகடையில் வாங்கியவர்கள் அங்கு போய் பாட்டிலை போட்டு பணம் வாங்கிவிட முடியாது. அதேபோல் இயந்திரத்தில் போடப்படும் பாட்டிலும் உடையாமல் சரியாக உள்ளதா என்பதை ஏஐ இயந்திரம் பார்க்கும். அதன்பின்னரே 10 ரூபாயை கூகுள் பே மூலமோ அல்லது ரொக்கமாவோ பெற்றுக்கொள்ள ஆப்ஷன் வரும். சோதனை முயற்சியாக எழும்பூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், படிப்படியாக தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த சோதனை முயற்சியில் என்னென்ன சிக்கல்கள் வருகிறது என்பதை ஆராய்ந்து, அதன்பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

    English Summary

    To stop ₹10 overcharging, Tasmac is installing automatic bottle return machines across TN. Testing has begun at Chennai Egmore, allowing customers to return empty bottles and get their ₹10 back.