இன்று முதல் செப். 6 வரை! சென்னை பீச்- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே

  • சென்னை: சென்னையில் இன்று முதல் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 6ஆம் தேதி வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    Advertisement

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரூ 842 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்புப் பணிகள் நடந்து வரும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

    Advertisement

    இதனால் இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.15 மணி வரை ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு 10.20, 11.20, 11.40 மற்றும் 11.59 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருமலைபூர்- சென்னை கடற்கரைக்கு இடையே இயக்கப்படும் இரவு 8 மணி மின்சார ரயிலும் , கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.15, 11.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்களும் செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு இயக்கப்படும் ரயிலும், தாம்பரம் மற்றும் சென்னை கடற்கரைக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும்.

    Advertisement

    ஆகஸ்ட் 26 ஆம் தேதி செப்டம்பர் 6 வரை வார நாட்களில் அதிகாலை 3.50 மணி முதல் இயக்கப்படும் கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் கடற்கரை - கூடுவாஞ்சேரி ரயில் இன்று முதல் 9.50 மணிக்கு புறப்படும். அது போல் இரவு 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய கடற்கரை- செங்கல்பட்டு மின்சார ரயில் இரவு 10.15 மணிக்கு புறப்படும்.

    வருகிற ஆகஸ்ட் 30-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து இரவு 10, 11.20, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயிலும், தாம்பரத்திலிருந்து இரவு 11 மணி, 11.40 மணி ஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20 மணி, 11 மணிஆகிய நேரங்களில் கடற்கரை வரும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து இரவு 9.40 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு செங்கல்பட்டு செல்லும். கடற்கரையில் இருந்து இரவு 9.50 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.10 மணிக்கு கூடுவாஞ்சேரி செல்லும். மேலும், கடற்கரையில் இருந்து இரவு 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில், அதற்கு மாற்றாக கடற்கரையில் இருந்து இரவு 10.25 மணிக்கு தாம்பரம் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    English Summary

    Southern railway announces that the Electric trains cancelled at night from today till september 6 from Chennai beach to tambaram.