Gold Rate Today: டக்குனு ஸ்டன் ஆன தங்கம் விலை.. 5 நாட்களாக எகிறிய நிலையில் இன்று மாற்றம் இல்லை!

  • சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் நேற்றைய விலைக்கே ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. முந்தைய 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்தது.

    Advertisement

    தங்கம் விலை

    தங்கத்தின் மீதான முதலீடுகள் மேலும் குறைந்தால், இந்திய சந்தையில் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ வட்டி உயர்வும் இந்திய சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தங்கத்தின் விலை அக்டோபர் மாதத்தில் மேலும் சரிய வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.

    Gold Rate Today: மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. 3 நாட்களில் ரூபாய் 1,000 உயர்வு!

    கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைந்திருந்தது. சனிக்கிழமை அன்று சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்தது. இந்நிலையில், இந்த வாரம் திங்கட்கிழமை சவரனுக்கு ரூபாய் 120 அதிகரித்தது. அக்டோபர் 26 ஆம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் விலை ரூ. 15 உயர்ந்து, ரூ.13,085க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Advertisement

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 1,05,080-க்கும் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று புதன்கிழமை (அக்டோபர் 28) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 13,195-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 வரை உயர்ந்தது.

    இன்றைய விலை

    இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் ஒரு சவரன் நேற்றைய விலைக்கே ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,195க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    வெள்ளியின் விலை ஒரு கிராம் இன்று ரூபாய் 5 குறைந்து ரூ.215-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 5000 ரூபாய் சரிந்து ரூ.2,15,000-க்கு விற்பனையாகிறது.

    2 கோடி, 93 சவரன் தங்கம்.. சென்னையில் ஐபிஎஸ் குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக பறித்த தம்பதி

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    29-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560

    28-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,560

    27-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,080

    26-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,680

    Advertisement

    25-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560

    24-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,560

    23-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,480

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880

    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120

    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120

    20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920

    19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560

    18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280

    Advertisement

    17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280

    16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

    English Summary

    There is no change in the price of gold jewellery in Chennai today. A sovereign of gold continues to be sold at yesterday’s price of ₹1,05,560. It is worth noting that the price of gold had risen by as much as ₹1,000 per sovereign over the previous three days alone.