DA Case: சொத்துக் குவிப்பு வழக்கு! எம்ஆர்கே பன்னீர் செல்வத்தை விடுவிக்க ஹைகோர்ட் மறுப்பு

  • சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தையும் அவரது குடும்பத்தினரையும் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    Advertisement

    2006-2011-ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வருமானத்திற்கு அதிகமாக ரூ 3.01 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை 2011 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீதான வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் , அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    Advertisement

    அந்த மனுவில், கடலூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து எம்ஆர்கே பன்னீர் செல்வத்தை விடுவிக்க மறுத்து அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

    English Summary

    Chennai High court refuses to leave MRK Paneer Selvam in DA Case in the period 2006- 2011 when he was minister.