Ramesh: அமைச்சர்களை விமர்சிப்பது எப்படி பொது அமைதிக்கு குந்தகமாகும்? பழனி வழக்கில் நீதிபதி கேள்வி

  • சென்னை: அமைச்சர்களை விமர்சிப்பது பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் செயல் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பழனி கோயில் நில விவகாரத்தில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

    Advertisement

    திண்டுக்கல்லை சேர்ந்தவர் வினோத் சூரியகுமார். இவர் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் பழனி கோயில் நில விவகாரம் தொடர்பாக வெளியிட்டிருந்தார்.

    Advertisement

    அந்த வீடியோவில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் இருந்தது என ரமேஷின் உதவியாளர் புகார் கொடுத்ததன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸாரால் வினோத் சூரியகுமார் கைது செய்யப்பட்டார்.

    பொது அமைதியை குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி வினோத் சூரியகுமார், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து அல்லது எதிர்ப்பு என்பது மதிக்கப்பட வேண்டியதாகும்.

    Advertisement

    அரசையோ அல்லது அதன் அமைச்சர்களையோ விமர்சிப்பதை அரசுக்கு எதிரான குற்றமாகவோ அல்லது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயலாகவோ கருத முடியாது. அவதூறான அல்லது பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தாலும் அது சட்டபடி அவதூறு குற்றம் மட்டுமே.

    மனுதாரர் மீது பதிவு செய்துள்ள பிரிவுகள் இந்த அவதூறு குற்றத்திற்கு பொருந்தாது. எனவே மனுதாரர் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பிணைத் தொகையாக ரூ 25 ஆயிரம் செலுத்த உத்தரவிட்டார்.

    மேலும் வினோத் பதிவு செய்த வீடியோ நாட்டின் இறையாண்மைக்கோ அல்லது பாதுகாப்புக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை. கோயில் நிலம் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதாக குறிப்பிடுவது இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டியதாகவும் கருத முடியாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பழனி மலையடிவாரத்தில் ரூ 100 கோடி மதிப்பிலான கோயில் நிலம், தனியாருக்கு ரூ 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த பத்திரப்பதிவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு குறித்து முக்கிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

    இந்த மோசடியில் அமைச்சர் ரமேஷின் உறவினருக்கும் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் அதை ரமேஷ் மறுத்தார். பின்னர் தன் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

    Advertisement

    அந்தவகையில் வினோத் சூரியகுமார் என்பவர் பழனி நில மோசடி விவகாரத்தை கையில் எடுத்து வீடியோ வெளியிட்ட நிலையில் அவர் மீது புகார் கூறப்பட்டு அவர் கடந்த 15-ஆம் தேதி கைதானார். தற்போது வினோத்திற்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த பழனி நில விவகாரத்தில் நிலம் விற்றவர், வாங்கியவர், உடந்தையாக இருந்தவர்கள் யார் யார் என்பதை போலீஸார் தேடி வருகிறார்கள்.

    English Summary

    Chennai Highcourt says that criticising ministers does not mean to disturb peace of the nation. The court orders in Palani temple land scam issue.