விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள்.. சபாநாயகர் உத்தரவு சரிதான்! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

  • சென்னை: தெவக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டிருந்தார். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகரின் நடவடிக்கை சரியானது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் சில நாட்கள் குழப்பம் இருந்தது. 108 இடங்களில் வென்றிருந்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைக்க உரிமை கோரியது.

    Advertisement

    ஆட்சியை அமைத்தபோது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அதிமுகவில் ஒரு பிரிவினர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக கொறாடா உத்தரவை மீறி விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 21 எம்எல்ஏக்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்திருந்தனர். மற்றவர்கள் தங்கள் பகுதியை ராஜினாமா செய்திருந்தனர்.

    அந்த மன்னிப்பு கடிதத்தை ஏற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்களை மன்னித்துவிட்டதாக சபாநாயகருக்கு கடிதம் அளித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டார்.

    Advertisement

    சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் தவறு இல்லை என தெரிவித்துள்ளது. சட்டப்படி சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கடிதத்தை அளித்துவிட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான கேள்வியே எழவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    இதனால், அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை சபாநாயகர் கைவிட்டது சரியான முடிவுதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    English Summary

    Madras High Court has dismissed a petition challenging the Speaker's decision to drop disqualification proceedings against AIADMK MLAs(அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு): Disqualification Action Against 21 AIADMK MLAs latest news in tamil.