சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலையிழப்பு என்பது மிகப்பெரிய பிரச்சனை. தூங்கி எழுவதற்குள் லேஆஃப் மெயில் வந்துவிடும். அப்படித்தான் சென்னையில் செயல்பட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் மேனேஜர்.. 10 ஆண்டுகள் தன்னுடன் வேலை பார்த்த 12 பேரை லேஆஃப் செய்ய சொல்லி வந்த நெருக்கடியை மிகவும் வேதனையுடன் விவரித்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில்.. மேனேஜராக பணியாற்றி வரும் இவருக்கு, நிர்வாகம் தரப்பில் 12 ஊழியர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவு வந்திருக்கிறது.
பிரச்சனை என்னவெனில்.. இந்த 12 ஊழியர்களும் கடந்த 10 ஆண்டுகளாக இரவுப் பகலாக நிறுவனத்திற்காக உழைத்திருக்கிறார்கள். இவர்களுடன் ஒன்றாக பழகி.. தெருவோர கடைகளில் டீ சாப்பிட்டு ஒன்றாக அமர்ந்து வேலை பார்த்திருக்கும் இந்த மேனேஜர்.. திடீரென 12 பேரை பணி நீக்கம் செய்ய சொன்னால் எப்படி செய்வது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தன்னுடன் மேனேஜர் என்று பழகாமல்.. அண்ணா என்றே சொல்லியே அவர்கள் பழகியதாகவும், அடுத்த நாள் காலையில் அவர்கள் வந்து குட் மார்னிங் அண்ணா என்று சொன்னால்.. நான் முகத்தை எங்கு வைத்துக்கொள்வது? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த உத்தரவு வந்ததிலிருந்து அந்த ஊழியர்களின் முகத்தில் முழிக்க முடியவில்லை என்று கூறும் மேனேஜர்.. கார் பார்க்கிங்கில் காரில் அமர்ந்து ஸ்டேரிங்கில் முகத்தை புகைத்துக்கொண்டு அழுதவாறு தனது வேதனையை பகிர்ந்திருக்கிறார். மெட்ராஸ் டெக்கீஸ் என்கிற தளத்தில் மேனேஜர் இது குறித்து பதிவிட்டிருப்பது கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு லாப-நட்ட கணக்கை பார்த்து.. ஊழியர்களை தூக்கி எறியும் கார்ப்பரேட் கலாச்சாரத்தில்.. ஊழியர்களுடன் நகமும், சதையுமாக பழகிய மேனேஜர்களின் நிலையை நிர்வாகம் புரிந்துக்கொள்வதில்லை என்று வேதனை தெரிவித்திருக்கிறார். லேஆஃப் செய்ய வேண்டிய ஊழியர்களில், ஒருவர் சமீபத்தில்தான் ஒரு பெரிய தொகையை வீட்டு லோனாக வாங்கியிருக்கிறார். அதேபோல, மற்றொருவரின் தாயாருக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் இன்சூரன்ஸைதான் இவர் சிகிச்சைக்காக நம்பியிருக்கிறார். சூழல் இப்படி இருக்கையில்.. அவர்களை பணி நீக்கம் செய்ய எனக்கு எப்படி மனம் வரும்? என்றும் மேனேஜர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவரது மனைவியிடம் பேசிய பிறகு.. இந்த விஷயத்தில் தெளிவு கிடைத்ததாக மேனேஜ் கூறியிருக்கிறார். அந்த 12 பேரை நீங்கள் பணி நீக்கம் செய்யாவிட்டாலும்.. ராஜினாமா செய்துவிட்டாலும் யாரோ ஒருவர் அந்த லேஆஃபை செய்யதான் போகிறார். அது நிச்சயம் நடக்கத்தான் போகிறது. ஆனால், அவசரப்பட்டு ராஜினாமா செய்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை அப்படியே சரிந்துவிடும் என்று மனைவி கூறியதாகவும் மேனேஜர் தெரிவித்திருக்கிறார். வழக்கம் போல தவெக அரசு.. முதலமைச்சர் விஜய் இந்த கார்ப்பரேட் கலாச்சாரத்தை கை கட்டி வேடிக்கை பார்ப்பாரா?