“எங்கிட்ட எங்க கேட்டாங்க?” தன் இஷ்டத்திற்கு முடிவெடுத்த தவெக அரசு! ஓபனாக பேசிய மேயர் பிரியா

  • சென்னை: சென்னை மாநகராட்சி சொத்துவரியை உயர்த்தியிருந்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    முன்னதாக மாநகராட்சி துணை மேயரும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி தொகுதிகளில் திமுக அதிக்கம் செலுத்தி மேயர் பதிவியை கையில் வைத்திருக்கிறது. ஆனால், சட்டமன்ற தொகுதிகள் என்று எடுத்துக்கொண்டால் தவெகதான் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. எனவே மாநகராட்சி கூட்டங்களில் முடிவெடுக்கப்படும் மக்கள் நலத்திட்டங்கள், செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    சென்னையில் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, இந்த வீடுகளுக்கு ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வந்த வரியை விட கூடுதல் வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவெடுத்தது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

    கடந்த ஆண்டு வெறும் ரூ.400 வரி செலுத்தினோம்.. இந்த ஆண்டு ரூ.2000 வரி கேட்கிறார்கள். கிட்டதட்ட 3 மடங்கு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ரூ.13,000 வரை வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. செய்யும் வேலைக்கு ஓய்வூதியம் கொடுப்பது கிடையாது.. சம்பளமும் கைக்கும், வாய்க்கும்தான் சரியாக இருக்கிறது. இருப்பினும் வாயை கட்டி, வயிற்றை கட்டி சென்னையில் வீடு வாங்கினால்.. வரி என்கிற பெயரில் இப்படி காசை பிடுங்குவதா? மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதம் இல்லை. வருமானமே இல்லாத அவர்கள் எப்படி வரியை கட்டுவார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    Advertisement

    இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் சமீரன், "மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் 55% கட்டிடங்களுக்கு ரூ.1,000-க்கும் குறைவாகவும், 95% சொத்துகளுக்கு ரூ.5,000-க்குள் தான் வரி உயர்ந்துள்ளது" என விளக்கமளித்திருந்தார்.

    என்னதான் மாநகர ஆணையர் விளக்கமளித்திருந்தாலும், வரி விஷயத்தில் மாநகராட்சி மேயரிடம் ஆலோசித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்று மேயர் பிரியா கூறியிருக்கிறார். இது மாநகராட்சி மீதுதான விமர்சனங்களை தீவிரப்படுத்தியிருக்கிறது.

    English Summary

    Chennai Mayor Priya: The Chennai Corporation's decision to hike property tax has sparked intense debate. Amidst this, Corporation Mayor Priya stated that no consultations were held with them regarding the property tax increase.