இது லிஸ்டுலேயே இல்லையே.. டெல்லிக்கு விஜய் அனுப்பிய முக்கிய மெசேஜ்.. தரமான முடிவா இருக்கே!

  • சென்னை; சென்னை மாநகரப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக நவீனமயமாக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தரத்திற்கு உயர்த்தவும் தமிழக அரசு புதிய மெகா திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

    Advertisement

    இத்திட்டத்தை MRTS புனரமைப்பு திட்டமாக செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி மற்றும் கடன் உதவிகளை கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. சுமார் ₹6,600 கோடி மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்ட திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த அரசு இதை சுயமாக செய்ய முடிவெடுத்த நிலையில், முதல்வர் விஜய் மத்திய அரசின் உதவியையும் கோர முடிவு செய்துள்ளார்.

    Advertisement

    விஜய்யின் கோரிக்கை ஏன்?

    இந்த பணியை மத்திய அரசுத் திட்டமாக எடுத்து நடத்த வேண்டும் என்று தமிழக அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் திட்டத்திற்கான பங்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படும்.

    அதுமட்டுமின்றி, சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டுக் கடன் உதவிகளைப் பெறுவதும் எளிதாகும். இதனால் தமிழக அரசின் நிதி நெருக்கடி பெருமளவு குறைந்து, கூடுதல் சுமை ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மெட்ரோ தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள்

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தற்போதைய பறக்கும் ரயில் நிலையங்கள், ரயில்கள் மற்றும் சிக்னல் அமைப்புகளை சென்னை மெட்ரோ ரயிலின் அதிநவீன தரத்திற்கு இணையானதாக மாற்றுவதாகும். இதற்கான திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

    Advertisement

    மத்திய அமைச்சகம் இதற்கு ஒப்புதல் அளித்தவுடன், இந்த அறிக்கை பொருளாதார விவகாரங்கள் துறைக்கு அனுப்பப்பட்டு, வெளிநாட்டு வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ்:

    அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களும் புதுப்பிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்படும்.
    ரயில்வே அமைப்புகள் மற்றும் சிக்னல்கள் நவீனமயமாக்கப்படும்.
    தற்போதுள்ள ரயில்கள் அனைத்தும் உயர்தர மெட்ரோ தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

    MRL வசம் ஒப்படைக்கும் பணி எப்போது?

    கடந்த 2025 ஜூலை மாதமே பறக்கும் ரயிலை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கையகப்படுத்துவதற்கு ரயில்வே வாரியம் பச்சைக்கொடி காட்டிவிட்டது. இருப்பினும், தெற்கு ரயில்வேக்கும் தமிழக அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே இந்த கையகப்படுத்தும் நடைமுறைகள் முழுமையாகத் தொடங்கும்.

    Advertisement

    தற்போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் ரயில்வே வாரியத்தின் பரிசீலனையில் உள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்குள் ரயில்வே வாரியத்திடமிருந்து இதற்கான இறுதி ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புனரமைப்புத் திட்டத்தை மத்திய அரசுத் திட்டமாக மாற்றுவது, ரயில்வே வாரியம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மேலும் வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

    சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் இந்த ஒட்டுமொத்த கையகப்படுத்தும் செயல்முறையையும் ஒருங்கிணைத்து வருகிறது. இதற்காக தமிழக அரசின் CUMTA அமைப்பு பறக்கும் ரயில் சேவை முழுமையாக CMRL வசம் ஒப்படைக்கப்படும் வரை இந்த திட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கண்காணித்து வழிகாட்டும்.

    Advertisement

    இந்த ரூ.6,600 கோடி புனரமைப்புத் திட்டம் நிறைவேறும்பட்சத்தில், சென்னையின் பறக்கும் ரயில் சேவை முற்றிலும் புதிய பொலிவுடன், பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிநவீன பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai MRTS Upgrade: Tamil Nadu govt needs support of Union Govt, Rs.6,600 Crore Central Fund