சிதறிய நடிகையின் உடல் பாகங்கள்.. 11,700 டன் குப்பையை சல்லடை போட்ட போலீஸ்! காட்டி கொடுத்த டாட்டூ

  • சென்னை: 2019ஆம் ஆண்டு சென்னையை அதிர வைத்த கொலை வழக்கு ஒன்று போலீசாருக்கு மிக பெரிய சவாலாக மாறியது. நகரின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் அந்த பெண் யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில், அவரது கையில் இருந்த இரண்டு டாட்டூக்கள் தான் இந்த மர்மத்திற்கு விடை கொடுத்தன.

    Advertisement

    கடந்த 2019 ஜனவரி மாதம் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கு அருகே பிளாஸ்டிக் பை ஒன்றில் இருந்து மனித விரல்கள் வெளியே நீட்டி கொண்டிருப்பதை ஒருவர் பார்த்து பதறி போனார். போலீசார் அந்த பையை திறந்தபோது, அதற்குள் துண்டிக்கப்பட்ட கை மற்றும் கால்கள் இருந்தன. ஆனால், அத்தோடு இது முடிந்துவிடவில்லை.

    Advertisement

    உடல் பாகங்கள்

    தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் எலும்புகள், குடல் உள்ளிட்ட மேலும் பல உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும் ஒரே பெண்ணுடையவை என்பது தடயவியல் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணின் வயது 30 முதல் 40க்குள் இருக்கலாம் என்றும், அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் கூர்மையான ஆயுதத்தால் உடல் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. ஆனால் முக்கியமான இரண்டு உடல் பாகங்களான தலை மற்றும் இடது கை மட்டும் கிடைக்கவில்லை.

    அந்த ஒரு டாட்டூ

    வழக்கை விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் மேலும் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீசார், கிட்டத்தட்ட 11,700 டன் குப்பைகளை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டனர். அப்போது வேறு சில உடல் பாகங்கள் கிடைத்தாலும், தலை மற்றும் இடது கை கிடைக்கவில்லை. இதற்கிடையே காணாமல் போன பெண்கள் தொடர்பான புகார்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த உடல் பாகங்கள் யாருடையது என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    Advertisement

    இறுதியாக போலீசார் உடலில் இருந்த சிறிய அடையாளங்களை ஆய்வு செய்யத் தொடங்கினர். கிடைத்த வலது கையில் இரண்டு முக்கியமான டாட்டூக்கள் இருந்தன. ஒன்று சிவன் - பார்வதி உருவம். மற்றொன்று டிராகன். அந்த கையில் இருந்த வளையல் மற்றும் பிற அடையாளங்களும் போலீசாருக்கு முக்கிய தடயங்களாக அமைந்தன.

    போலீசாரிடம் புகார்

    அதே நேரம் தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 37 வயது மகள் சந்தியா சென்னையில் மாயமாகிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். சந்தியா சினிமாவில் நடிகையாக முயற்சி செய்து வந்தவர். அவர் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வந்தார். போலீசார் சந்தியாவின் குடும்பத்தினரிடம் உடலில் இருந்த அடையாளங்களை காட்டியபோது, அவரது தாய் சிவன் பார்வதி டாட்டூவை அடையாளம் கண்டார். பின்னர் நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனை, அந்த உடல் சந்தியுடையது என்பதை உறுதி செய்தது.

    Advertisement

    உடல் பாகங்கள் சந்தியாவுடையது என்பது உறுதியானவுடன் போலீசாரின் விசாரணை அவரது கணவர் பாலகிருஷ்ணனை நோக்கி திரும்பியது. சந்தியா தூத்துக்குடிக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் தொடர்பு கொள்ளவில்லை என்றும் பாலகிருஷ்ணன் கூறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரது பதில்களில் முரண்பாடுகள் இருந்ததாக போலீசார் கருதினர். இறுதியில் பாலகிருஷ்ணன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார்.

    என்ன நடந்தது

    சந்தியாவின் நடத்தையை பாலகிருஷ்ணன் சந்தேகித்ததாகவும் 2019 ஜனவரி 19ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் கூறினர். அந்த மோதலில் சந்தியாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாகவும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.. வீட்டில் ரத்த கறைகள், உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட பைகள் மற்றும் ஆயுதம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகளும் இதை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    Advertisement

    போலீசார் பெரும்பாலான உடல் பாகங்களை மீட்டாலும், சந்தியாவின் தலை மற்றும் இடது கை மட்டும் கடைசி வரை கிடைக்கவில்லை. ஒரு பெண்ணின் அடையாளமே தெரியாமல் போகும் வகையில் உடல் பாகங்கள் நகரம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட இந்த வழக்கில், கையில் இருந்த இரண்டு டாட்டூக்கள் தான் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.

    English Summary

    Chennai murder case remained a mystery after a woman's body parts were found across the city(சென்னையை அதிர வைத்த மர்ம கொலை): Chennai Murder Mystery Police finally identified her through two tattoos on her hand.