2 நாளில் 17 கொலைகள்.. சென்னையில் மீண்டும் ஒரு பயங்கரம்.. காசிமேட்டில் ரவுடி வெட்டிக் கொலை

  • சென்னை: சென்னை காசிமேடு பழைய மீன் ஏலக்கூடம் அருகே ரவுடி தீபாத் வெட்டிக் கொலை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக ரவுடி கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளியையொட்டி 2 நாட்களில் 17 கொலைகள் நடந்துள்ள நிலையில் இன்று ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தலைவர் விஜய் தீவிரமாக பொதுமக்களிடம் முன்வைத்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது.

    Advertisement

    தொடரும் கொலை

    சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அதிலும், குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 17 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

    தலைநகரில் ஷாக்.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர்! கொலையாளிகளைத் தேடும் போலீஸ்

    ரவுடி தீபாத் கொலை

    இந்நிலையில், சென்னை காசிமேடு பழைய மீன் ஏலக்கூடம் அருகே ரவுடி தீபாத் என்கிற நபர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்த தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Advertisement

    போலீஸ் விசாரணை

    முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    English Summary

    Chennai Murder: Rowdy Deepath was hacked to death near Kasimedu's old fish auction centre in Chennai, raising fresh concerns over the law and order situation amid reports of 17 murders in two days.