குழந்தைகளை தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா? உதயநிதி ஸ்டாலின் அட்டாக்

  • சென்னை: செவிலியர் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக மட்டும் நீளும் விஜய்யின் கரங்கள், உயிர் காக்கும் செவிலியர்களின் உண்மை கண்ணீரை துடைக்க மறுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    மேலும் குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன 'தாய்மாமன் தடியடி திட்டமா?' எனவும் கேள்வி எழுப்பியுள்ள உதயநிதி ஸ்டாலின், செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் செவிலியர்கள் போராட்டம்

    பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் நேற்று சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்று தவெக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    இதையடுத்து அரசுத் தரப்பில் செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததது. ஆனாலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி போராட்டம் நீடித்தது. இதனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீசாருக்கும் செவிலியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் உண்டானது.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். அப்போது போலீசார் குழந்தைகள் மீது தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. செவிலியர்கள் மீதான போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    பணி நிரந்தரம் - சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த Dummy CM-ன் அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சியாக இருந்த போது, ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று சொன்ன இன்றைய கோமாளி ஆட்சியாளர்கள், இன்றைக்கு செவிலியர் போராட்டத்திற்கு முதல் ஆளாக காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர்.

    Advertisement

    தாய்மாமன் தடியடி திட்டமா?

    ஒருபக்கம், போராட்டக்களத்தில் சிறிய இடத்தில் செவிலியர்களை அடைப்பது - மின்சாரத்தை நிறுத்துவது - உயிர் வேணுமா வேண்டாமா என்று மிரட்டுவது என அத்துமீறும் இந்த ஆட்சியாளர்கள் - மறுப்பக்கம், Abusive Warriors மூலம் செவிலியர்களையும் - அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம்.

    செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என அன்றைக்கு punch dialog பேசிவிட்டு, இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீது கூட தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு. குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன தாய்மாமன் தடியடி திட்டமா?

    Advertisement

    பெட்டி வேட்பாளர் போலி கண்ணீர்

    பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரை துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன்? செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    English Summary

    Udhayanidhi Stalin, Opposition Leader has condemned the attack on nurses. He questioned why Vijay, whose hands reach out only to wipe away the 'crocodile tears' of a proxy candidate, refuses to wipe away the genuine tears of life-saving nurses.