பெருவெள்ளம் வந்தாலும் வேளச்சேரி, பள்ளிக்கரணை தத்தளிக்காது! பைக்கில் வந்து பணியை தொடங்கிய ஆனந்த்!

  • சென்னை: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் மடுவில் இன்று முதல் தூர்வாரும் பணிகள் தொடங்குகின்றன. இவற்றை நீர் வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். பருவமழைக்கால முன்னெச்சரிக்கையின் ஒரு பகுதியாக இந்த பணிகள் தொடங்கப்படுகின்றன. முன்னதாக போக்குவரத்து நெரிசல் காரணமாக அவர் இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார்.

    Advertisement

    ஒக்கியம் துரைப்பாக்கம் மடு என்பது தென் சென்னையின் மிக முக்கியமான இயற்கை வடிகால் கால்வாயாகும். இது வெள்ள மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் நீளம் சுமார் 2.8 கி.மீ. ஆகும்.

    Advertisement

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து உபரிநீரை எடுத்துக் கொண்டு ஓஎம்ஆர் வழியாக கடந்து பக்கிங்காம் கால்வாயில் இணைகிறது. அப்போது ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், ஒக்கியம்பேட்டை, கண்ணகி நகர் வழியாக இந்த நீர் செல்கிறது.

    பின்னர் பக்கிங்காம் கால்வாயில் இருந்து முட்டுக்காட்டு முகத்துவாரம் வழியாக சென்று கடலில் கலக்கிறது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெருங்குடி, மேடவாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் போது மேற்கண்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க இந்த மடுவில் நீர் என்பது ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது அவசியமாகும்.

    ஒரு வேளை அடைப்புகள் காரணமாக தேங்கிவிட்டால் தென் சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது இந்த மடுவில் நீர் ஓட்டம் வேகமாக செல்லாமல் தேக்கம் இருந்தது. இதனால் தென் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதே நிலைதான் 2023 வெள்ளத்தின் போதும் நடந்தது.

    Advertisement

    இந்த நிலையில் பருவமழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் பரபாமரிப்பின் ஒரு பகுதியாக சென்னை கூவம் ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நில உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு செல்லும் ஒக்கியம் துரைப்பாக்கம் மடுவில் இன்று தூர்வாரும் பணிகளை அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார். அவருக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் வரவேற்பளித்தனர். மேலும் அங்கு நடக்கும் பணிகள் குறித்தும் விளக்கினர்.

    இவ்வாறு தூர்வாருவதால் நீர் நிலைகளின் ஆழம், கொள்ளளவு அதிகரித்து அதிக அளவில் மழை நீரை சேமிக்கலாம். நீர் நிலைகளில் நீர் தேங்கும் அளவு அதிகரித்தால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும்.

    Advertisement

    இந்த தூர்வாரும் பணியின் போது வண்டல் மண் வெளியேற்றப்படுவதால் மழை நீர் தேங்காமல் தங்கு தடையின்றி கடலில் போய் கலக்கும். தூர்வாரும் போது கிடைக்கும் இந்த வண்டல் மண்ணாது இயற்கை உரமாக விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு பயன்படுத்தலாம். கடந்த ஆட்சிகளில் இந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Desilting works are going to be done at Okkiyam Thoraipakkam Madu in chennai will start today by Tamil nadu Water resources minister N.Anand.