ஏ என்ன.. சென்னை காவல் ஆணையர் சொன்ன ஒரு வார்த்தை.. அடாவடி செய்த திமுகவினர் தெறித்து ஓட்டம்

  • டெல்லி: சென்னையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் காவல் வாகனத்தில் ஏற்றி சென்றபோது திமுகவினர் போராட்டம் செய்தனர். பேரிகார்டுகளை வைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது டென்ஷனாகி சென்னை போலீஸ் ஆணையர் அமல்ராஜ் சொன்ன ஒரு வார்த்தையால் திமுகவினர் தெறித்து ஓடிய சம்பவம் நடந்தது.

    Advertisement

    தஞ்சாவூரில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று முதல்வர் விஜய்யை, நடிகை ஒருவருடன் தொடர்புப்படுத்தும் நோக்கில் இரட்டை அர்த்தத்தில் பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பாக தஞ்சாவூர் போலீசார் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை இன்று கைது செய்தனர்.

    Advertisement

    சென்னை நீலாங்கரை இல்லத்தில் இன்று காலை உதயநிதி ஸ்டாலின் இருந்த நிலையில் அங்கேயே சென்று போலீசார் கைது நடவடிக்கையை எடுத்தனர். திமுக வழக்கறிஞர்கள், முன்னாள் அமைச்சர்கள் கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தும் கூட போலீசார் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

    வெள்ளை நிற டெம்போ டிராவலர் வேனில் உதயநிதி ஸ்டாலினை ஏற்றி போலீசார் தஞ்சாவூர் அழைத்து சென்றனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு வேனில் போலீசார் ஏற்றியதும் அவரது வீட்டு முன்பு கூடியிருந்த திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியின் அமர்ந்திருந்த காவல்துறை வாகனத்தின் முன்பு அமர்ந்து தடுத்து நிறுத்தினர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

    Advertisement

    அதன்பிறகு திமுகவினர் காவல்துறையின் வாகனத்தின் முன்பு பேரணி போல் சென்றனர். இந்த சமயத்தில் சில திமுகவினர் அடாவடியில் ஈடுபட்டனர். சாலையோரம் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு வேலிகளை சாலையின் மையப்பகுதிக்கு இழுத்து வந்து உதயநிதி ஸ்டாலினை அழைத்து செல்வதற்கு தடையை ஏற்படுத்தினர். போலீசார் அந்த தடுப்பு வேலிகளை அங்கிருந்து அகற்றி வந்தனர்.

    ஆனால் திமுகவினர் தொடர்ந்து பேரிகார்டுகளை வைத்து தடையை ஏற்படுத்தினர். இதனால் உதயநிதியின் வாகனத்தால் வேகமாக செல்ல முடியவில்லை. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் கடும் கோபமடைந்தனர். ''ஏ என்ன'' என்று திமுகவினரை நோக்கி முறைத்து பார்த்தார். இதில் பயந்துபோன திமுகவினர் பாரிகார்டுகளை விட்டுவிட்டு ஓடினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

    Advertisement

    இது ஒருபுறம் இருக்க உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனியில் மறியல் போராட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் அண்ணா சாலையில் திமுகவினர் - தவெகவினர் போட்டி போராட்டம் நடத்தி மாற்றி மாற்றி கல்வீசி தாக்கி கொண்டனர். திருநெல்வேலியில் சாலையில் ஸ்கூட்டரில் சென்ற இளைஞரை திமுகவினர் தாக்கினர். இதுபோல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் திமுகவினர் அடாவடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    English Summary

    Udhayanidhi Stalin, the Leader of the Opposition in Tamil Nadu, was arrested in Chennai today. DMK cadres staged a protest as the police were taking him away in a police vehicle, attempting to block the path using barricades. However, a single remark made by Chennai Police Commissioner Amalraj-delivered in a moment of high tension-caused the DMK cadres to scatter and flee.