விஜய் குறித்து தரக்குறைவாக விமர்சனம்.. சேகர்பாபு மீது 7 பிரிவுகளில் வழக்கு.. அடுத்து அரஸ்டா

  • சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு புகார்களை முதலமைச்சர் விஜய் வைத்தார். மிசா காலத்தை ஒப்பிட்டு ஸ்டாலினை விஜய் உருவகேலி செய்தது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து திமுக சார்பில் கடந்த 12 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல இடங்களில் திமுகவினர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து தரக்குறைவாக பேசினர். விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்து ஒருமையில் கடுமையாக விமர்சித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    Advertisement

    தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜயை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது சேகர்பாபு சுமார் 7 நிமிடங்கள் பேசினார். "உனக்கு சட்டமன்றம் பாதுகாப்பாக இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசகூடாது. அடிபட்ட புலியாக திமுக களத்தில் நிற்கிறது. வட்டியும், முதலுமாக பதிலடி கொடுப்போம்.

    Advertisement

    சேகர்பாபு விமர்சனம்

    ஓடுகாலிகளை இந்த நாட்டை விட்டு ஓட ஓட விரட்டுவோம். இதே இடத்தில் மேடை போடுகிறோம். மிசா குறித்து எங்கள் ஜென் ஸி இளைஞர்களுடன் வாக்குவாதம் செய்ய தயாரா" என்று சேகர்பாபு பேசியிருந்தார். அவர் முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இது சர்ச்சையானது. நாய்கள் என குறிப்பிட்டு ஒருமையில் சேகர்பாபு விமர்சனம் செய்தார்.

    இதுகுறித்து அன்னை சத்யா நகரை சேர்ந்த தவெக நிர்வாகி ஜெகதீஸ்வரி வடக்கு கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தார். தனிநபரை அவமானப்படுத்தும் வகையில் அநாகரீகமாக பேசியுள்ளார். தவெக திமுக இடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் பேசியுள்ளார். முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல்குமார் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

    Advertisement

    7 பிரிவுகளில் வழக்கு

    அதனடிப்படையில் முதலமைச்சர் குறித்து தரக்குறைவாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வடக்கு கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறு பரப்புதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்தல் நேரத்தில் துறைமுகம் தவெக வேட்பாளர் அசோக் சினோரா உள்ளிட்டோரை தாக்கியதாக சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய வேண்டும் என தவெகவினர் கூறி வருகிறார்கள்.

    English Summary

    DMK Former Minister Sekarbabu remarks on CM Vijay sparks controversy. Chennai north beach Police filed FIR in 7 sections on Sekarbabu.