கரண்ட் இல்லனு கேட்டா.. நாயை விரட்டுற மாதிரி துரத்துறாங்க! உச்சக்கட்ட கோபத்தில் சென்னை மக்கள்

  • சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு பிரச்சனை சீரியஸாக போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் முன் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை டென்ஷனாக்கியிருக்கிறது. சென்னையில், மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால், நாயை விரட்டுவதை போல விரட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Advertisement

    கொளத்தூர், திருவொற்றியூர், பெரம்பூர் என பெரும்பாலும் வடசென்னையில் பல பகுதிகளில் திடீர் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. கொளத்தூர் பகுதியில் நேற்றிரவு பலமுறை மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல வேறு சில இடங்களில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மக்கள் கேள்வி எழுப்பி, மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்திருக்கின்றனர். ஆனால், எந்த பதிலும் இல்லை.

    Advertisement

    இது குறித்து மக்கள் கூறுகையில், "ராத்திரி 10 மணியிலிருந்து கரண்ட் இல்லை. காலை எழுந்திருச்சு வேலைக்கு போகனும். நிம்மதியா தூங்கினாதா போக முடியும். குழந்தைகள், முதியோர், நோயாளிகள் இருக்கின்றனர். கரண்ட் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. நிறையமுறை போன் பண்ணி பார்த்துட்டோம் ஆனா எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. EB ஆபிஸ் போய் கேட்டா.. நாயை துரத்துர மாதிரி துரத்துறாங்க. AE-கிட்ட பேச போன.. தவெகவினர் குறுக்கே வந்து நின்னுட்டு எங்ககிட்ட பேசுங்கனு சொல்றாங்க.

    இவங்க யாரு? இவங்ககிட்ட நாங்க ஏன் பேசனும்? பவர் கட்.. அதனால் துறை சார்ந்த அதிகாரிகளை நாங்க சந்திக்க போகிறோம்! இவங்க என்ன EB அதிகாரிகளா? அதெல்லாம் ஒன்னும் இல்லை. அப்புறம் இவங்க ஏன் குறுக்கே வந்து நிக்கிறாங்க? EB இவங்கள அடியாட்களா வச்சு இருக்கா? நாங்க என்ன ரவுடிசம் பண்ணவா வந்திருக்கோம்? எங்க ஏரியால கரண்ட் இல்ல. ஏன் கரண்ட் இல்லைனு கேட்க வந்தா.. எங்கள தாண்டி போக கூடாதுனு சொல்றதுக்கு இவங்க யாரு?

    Advertisement

    நாங்க AE கோபால கிருஷ்ணனுக்கு போன் அடிச்சோம். ஆனா எடுக்க.. 10 மணிக்கு போன கரண்ட், நைட்டு 12 மணி வரைக்கும் வரல. சரி AE ஏரியாகுள்ள இருப்பாருனு நெனைச்சா அங்கயும் இல்ல.

    கொஞ்ச நாட்களுக்கு முன்னாடியும் இப்படித்தான் நடந்துச்சு. அப்போ நாங்க உயர் அதிகாரிங்ககிட்ட புகார் கொடுத்தோம். அப்போதைக்கு நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்களே தவிர.. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததால், இப்போது என்ன புகார் கொடுத்தாலும் அதை கோபாலகிருஷ்ணன் பெரியதாக எடுத்துக்கொள்வதே இல்லை" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

    English Summary

    Chennai power cuts: The issue of power outages in Tamil Nadu has become serious over the past few days. Unannounced power cuts, particularly at night, have caused frustration among the public. Residents in Chennai have alleged that when they question electricity board officials about the outages, they are shooed away as if they were stray dogs.