பென்ஷன் பணமே ரூ.28,000தான்.. இதுல ரூ.12,000 சொத்து வரி கட்ட சொன்னா எப்படி? புலம்பும் மக்கள்!

  • சென்னை: சென்னை மாநகராட்சி சமீபத்தில் சொத்து வரியை மறு மதிப்பீடு செய்து உயர்த்தியிருந்தது. இந்த வரி உயர்வு சமானிய, மூத்த குடிமக்களை கடுமையாக பாதித்திருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    தவெக ஆட்சி அமைந்த உடன் முதலில் எழுந்த புகார் மின் கட்டணம் பற்றிதான். எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென எக்கச்சக்கமாக மின் கட்டணம் எகிறியது. இந்த பிரச்சனை ஓய்வதற்குள் தற்போது சொத்து வரி உயர்வு எனும் புதிய புகார் எழுந்திருக்கிறது.

    Advertisement

    கடந்த ஆண்டு வரை ரூ.475 மட்டுமே வரியாக கட்டி வந்தோம். இப்போது திடீரென ரூ.6,000 கட்ட சொல்ல கேட்கிறார்கள் என்று மக்கள் புலம்புகின்றனர். இது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் அளித்திருக்கின்றனர். இன்று மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் ஒருவர், "நான் வசித்து வரும் வீட்டிற்கு கடந்த 2021-2022 வரை ரூ.3,575தான் வரியாக வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென 2024-2025ல் ரூ.9,000 என 3 மடங்காக வரியை ஏற்றிவிட்டார்கள்.

    இந்த வரி உயர்வு குறித்து விளக்கம் கோரி நான் மனு கொடுத்திருந்தேன். ஆனால், எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் 2025-2026க்கான வரியை ரூ.12,815 ஆக உயர்த்திவிட்டார்கள். நான் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமகன். வருமானம் கிடையாது. வாழ்க்கையை ஓட்ட ரூ.28,000 பென்ஷன் கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு மருத்துவ செலவு, உணவு உள்ளிட்ட செலவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படி இருக்கையில், வரியை ரூ.9,000 ஆக உயர்த்தியபோதே கடுமையாக பாதிக்கப்பட்டேன். இப்போது ரூ.12,815 ஆக வரி உயர்த்தப்பட்டிருப்பது.. என் கையை மீறிய செலவாகும்.

    Advertisement

    மறு மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். நான் கடந்த 20011ல் வீட்டை வாங்கியிருந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு வரி கிடையாது. வரி உயர்வு இருக்கலாம்.. ஒரு 5 சதவிகிதம் என்கிற அளவுக்கு இருந்தால் எங்களால் சமாளிக்க முடியும். ஒரேயடியாக 3 மடங்கு.. அதன் பின்னர் 3 மடங்கு என்று வரியை உயர்த்துவது எல்லாம் சரியில்லை" என்று கூறியிருக்கிறார்.

    மற்றொரு முதியவர் கூறுகையில், "என்னுடைய வீடு 700 சதுரஅடி நிலப்பரப்பில் இருக்கிறது. இதற்கு ஆண்டுதோறும் ரூ.200 என வரியை கட்டி வந்தேன். இப்போது ரூ.2500 கட்ட சொல்கிறார்கள். நான் மூத்த குடிமகன், பணி ஓய்வு பெற்றவன். எனக்கு பென்ஷன் எல்லாம் எதுவும் கிடையாது. இப்படி இருக்கையில் என்னால் திடீரென இவ்வளவு தொகையை கட்டுவதில் சிரமம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Chennai Property Tax: The Chennai Corporation recently revised property tax rates upwards. Complaints have arisen that this tax hike has severely affected ordinary people and senior citizens.