ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி.. சென்னையில் போராடிய இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது

  • சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் கைது செய்தனர்.

    Advertisement

    வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவரைப் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    Advertisement

    சென்னையில் போராட்டம்

    கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சென்னையிலும் இன்று பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகச் சென்றனர்.

    Advertisement

    குண்டுக்கட்டாக கைது

    தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பியவாறு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    More than 30 youth protesters demanding Chief Election Commissioner Gyanesh Kumar’s resignation were arrested by Chennai police during a protest march near Chepauk.