சென்னை - கத்தார் விமானத்தில் என்ஜின் கோளாறு.. அதிர்ஷ்டவசமாக தப்பிய 224 பயணிகள்! என்ன நடந்தது?

  • சென்னை: சென்னையில் இருந்து மேற்காசியவில் உள்ள தோஹாவிற்கு 224 பயணிகளுடன் செல்ல இருந்த விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. கடைசி நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால், விமானத்தின் டேக் ஆப் கைவிடப்பட்டு உடனடியாக பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. உரிய நேரத்தில் விமானி என்ஜின் கோளாறை கண்டுபிடித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    Advertisement

    சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவிற்கு கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 4.15 மணிக்கு சென்னையில் இருந்து தோஹாவிற்கு புறப்பட இருந்தது. விமானத்தில் 224 பயணிகள் இருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்று விமானம் டேக் ஆப் ஆக ரெடியானது.

    Advertisement

    அப்போது விமானத்தில் என்ஜின் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். விமானத்தை இயக்கினால் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்த விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறினார். நிலமையின் தீவிரத்தை புரிந்த விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உடனடியாக விமானத்தை நிறுத்த அனுமதி அளித்தனர். இதையடுத்து, உடனடியாக விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு, விமானம் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது.

    விமானத்தில் இருந்த 224 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. விமானம் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து வரப்பட்டதும், அங்கு தயாராக இருந்த டெக்னிக்கல் குழுவினர் விமானத்த்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    Advertisement

    எனினும் கோளாறு உடனடியாக சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது. விமான பயணிகள் 212 பேரும் சென்னையில் உள்ள பல்வேறு தோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு இன்று அதிகாலை மீண்டும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கத்தார் விமானத்தில் செல்ல இருந்த பயணிகளில் 100 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து ஆகிய இடங்களுக்கு கனெக்டிங் விமானங்கள் வழியாக செல்ல திட்டமிட்டு இருந்தனர். இதனால், சென்னையில் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Advertisement

    எனினும், உரிய நேரத்தில் விமானத்தில் என்ஜின் கோளாறு கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதனால், பயணிகளும், பயணிகளின் உறவினர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சென்னை ஏர்போர்ட்டில் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த நிகழ்வால் ஏர்போர்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English Summary

    Chennai Qatar flight: A technical fault was detected in an aircraft scheduled to fly from Chennai to Doha in West Asia, carrying 224 passengers. As the issue was identified at the last moment, the takeoff was aborted, and the aircraft was immediately moved to a parking area. A major incident was averted because the pilot discovered the engine malfunction in time.