15 மண்டலம்.. 8 அமைச்சர்கள்.. சென்னை மாநகராட்சி வெள்ள நிவாரண பணி.. விஜய் அதிரடி உத்தரவு

  • சென்னை: சென்னையில் கனமழை பெய்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிவாரண பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக முதலமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். சென்னை மாநகராட்சிக்கு மண்டல வாரியாக 8 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சென்னை திரும்பி களத்தில் இறங்கி பணியாற்ற விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகரில் நேற்று நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது. வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. 4 மணி நேரத்தில் 35.8 செ.மீ கனமழை பெய்துள்ளது. சூப்பர் எல்நினோ தாக்கத்தால் குறுகிய நேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது. அக்டோபர் 17, 21 தேதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை.

    Advertisement

    மண்டல பொறுப்பு அமைச்சர்கள்

    இதனால் சென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. இதன் வளர்ச்சி பணிக்காக 8 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் அருண்ராஜ், ரமேஷ், விக்னேஷ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்செல்வன், பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன் ஆயோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

    சென்னை மாநகராட்சி சார்பில் நிவாரண பணிக்கு உதவி எண்கள் வெளியிடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை உடனடியாக அகற்ற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவொற்றியூர் மணலிக்கு ரமேஷ், தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்களுக்கு லோகேஷ் தமிழ்செல்வன், ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களுக்கு அருண்ராஜ் பொறப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர.

    Advertisement

    வெள்ள நிவாரண பணி

    இதேபோல அண்ணாநகர் தேனாம்பேட்டை, அம்பத்தூர் மண்டலங்களுக்கு விஜய் பாலாஜி, வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களுக்கு பிரபு , ஆலந்தூர் அடையாறு மண்டலங்களுக்கு பார்த்திபன், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு விக்னேஷ் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த 15 மண்டலத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் மூலம் களப்பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார். வெளியூரில் உள்ள அமைச்சர்களை அவரவர் பொறுப்பு மண்டலங்களுக்கு உடனடியாக சென்று கள ஆய்வு பணியை செய்ய வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால் மழை வெள்ள நிவாரண பணிகளில் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Chennai Corporation area affected by heavy rain. CM Vijay ordered Ministers to assemble for relif work.