அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம்

  • சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தது. வானிலை மையம் அறிவிப்பை தொடர்ந்து மாலை 5 மணியளவில் சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை கொட்டியது. பல்லாவரம், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் அவ்வப்போது மாலை நேரங்களில் மழை கொட்டி வருகிறது. தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று கூட தென்காசி, குமரி, நெல்லையில் ஒரு சில இடங்களில் லேசான மழை கொட்டியது.

    Advertisement

    சென்னையில் மாலையில் கொட்டிய மழை

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. சின்னக்கல்லார் பகுதியில் நேற்று ஒரே நாளில் 4 செமீ அளவுக்கு மழை கொட்டியது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    "தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.. இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை கொட்டியது.

    Advertisement

    சென்னையின் மாதவரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. முன்னதாக வானிலை மைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    இடி, மின்னலுடன் மழை பெய்யும்

    இன்று முதல் வரும் 2 ஆம் தேதி வரை, வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    வரும் 3 ஆம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Advertisement

    அதிகபட்ச வெப்பநிலை:

    30-06-2026 முதல் 04-07-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

    பதிவான மழை அளவு (செமீ):

    * தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4 செமீ,
    * நாலுமுக்கு (திருநெல்வேலி), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 3 செமீ,

    * ஊத்து (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வாழப்பாடி (சேலம்), தேவாலா (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 2 செமீ,

    Advertisement

    * செருமுள்ளி (நீலகிரி), கூடலூர் பஜார் (நீலகிரி), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வாழப்பாடி ARG (சேலம்). கூடலூர் (நீலகிரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்ட்ட (நீலகிரி' (நக்காச்சி (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்), நடுவட்டம் (நீல டே ஷ்பேட்டை (சேலம்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது". என கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Chennai Rain: The Regional Meteorological Centre has forecast rain accompanied by thunderstorms and lightning in Chennai, Tiruvallur, Kancheepuram and 3 other Tamil Nadu districts over the next 3 hours.