Chennai: உலகிலேயே எந்த நகரங்கள் கல்விக்கு சிறந்தவை? வெளியான QS Ranking! சென்னைக்கு எத்தனையாவது இடம்?

  • சென்னை: கல்வி கற்க உகந்த நகரமாக சென்னை 123 ஆவது இடத்தை பிடித்துள்ளது. எந்தெந்த நகரங்களுக்கு என்னென்ன இடங்களை என்பதை பார்க்கலாம். மேலும் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது எந்த நிறுவனம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

    Advertisement

    ஐரோப்பா நாட்டின் லண்டன் நகரை சேர்ந்த கியூ.எஸ். தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் (Quacquarelli Symonds) சிறந்த பல்கலைக்கழகங்களில் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

    Advertisement

    அந்த வகையில் மாணவர்கள் படிப்பதற்கு தகுதியான நகரங்கள் எவை என்பதையும் வெளியிட்டுள்ளது. இதன்படி 2027 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

    இது தேர்வு செய்வது எப்படி என்றால், வேலைவாய்ப்புகள், மாணவர்களின் வாழ்க்கை தரம், செலவு, சர்வதேச அரங்கில் மாணவர்களின் பங்கு, மாணவர்களின் ஆலோசனைகள், கருத்துகள் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசை பட்டியல் வெளியாகிறது.

    அதில் உலகளவில் தென்கொரியாவை சேர்ந்த சியோல் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதன் பிறகு ஜப்பான் தலைநகர் டோக்கியோ 2ஆவது இடத்தையும், பிரிட்டன் தலைநகர் லண்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    Advertisement

    4ஆவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், 5ஆவது இடத்தில் ஜெர்மனியின் முனிச், சிட்னி ஆகிய இடங்கள் உள்ளன. அது போல் 7ஆவது இடத்தில் பாரிஸ், 8 ஆவது இடத்தில் பெர்லின், 9 ஆவது இடத்தில் வியன்னா, 10ஆவது ஜூரிச், 11 ஆவது இடத்தில் சிங்கப்பூர், 12 ஆவது இடத்தில் பெய்ஜிங், 13 ஆவது இடத்தில் எடின்பெர்க், 14 ஆவது இடத்தில் டைபே, 15ஆவது இடத்தில் கோலாலம்பூர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு 23 ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தமட்டில் மும்பைக்கு 91 ஆவது இடமும், டெல்லிக்கு 99 ஆவது இடமும், பெங்களூருக்கு 114 ஆவது இடமும் , சென்னைக்கு 123 ஆவது இடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அது போல் இந்த நிறுவனத்தின் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பே, இடத்தில் ஐஐடி சென்னை ஆகியவை சிறப்பிடம் பிடித்துள்ளன.

    இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சூலினி தனியார் பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு 503-வது இடத்தில் இருந்து இந்த முறை 452-வது இடத்திற்கு முன்னேறி இந்தியாவின் 'டாப் 10' பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.

    வேலூர் விஐடி, 94 இடங்கள் முன்னேறி 597-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் முதல் 5 இடங்களை பிடித்த பல்கலைக்கழகங்கள் எவை என்பதை பார்க்கலாம்.

    MIT (அமெரிக்கா), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா), இம்பீரியல் காலேஜ் லண்டன் (பிரிட்டன்), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்), ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) ஆகியவை ஆகும்.

    English Summary

    Chennai ranked 123rd globally in QS ranking under best cities to study. Mumbai got 91st, Delhi got 99th place. Bangalore got 114th place in best cities ranking.